நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி வருகிற 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மதுபானக்கடைகள் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான தேர்தல் இந்தியாவில் தொடங்கியுள்ளது. அந்த வகையில் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன் தினம் தொடங்கியுள்ளது. மொத்தமாக 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகளும் தொகுதிப்பங்கீட்டை முடித்து விட்டு பிரச்சார களத்தில் இறங்கியுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரத்தையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன் படி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல தற்போது மேலும் ஒரு உத்தரவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் படி தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதே போல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4 ஆம் தேதியும் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
இதையும் படியுங்கள்