School Leave : மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

Published : Mar 08, 2022, 08:36 AM ISTUpdated : Mar 08, 2022, 08:38 AM IST
School Leave : மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

சுருக்கம்

School Leave : கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உள்ளது மாவட்ட நிர்வாகம்.

பெண்களின் சபரிமலை :

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற ஆலயம் தான் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். கேரள மாநிலத்தில் உள்ள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி கொண்டு இந்த கோவிலுக்கு வருவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. 

இந்த கோவிலுக்கு ஆண்களை விட பெண்கள் தான் அதிக அளவில் வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத விழாவின் போது இந்த கோவிலுக்கு 41 நாள் விரதம் இருந்து இருமுடி கட்டி சென்று நேத்திக்கடன்களை செய்து வருகின்றனர். மாசி மாத விழாவின் போது பக்தர்கள் கோவிலை சுற்றி பொங்கல் வைத்து வழிபட்டு கொண்டிருக்கின்றனர். 

10 நாட்கள் திருவிழா :

அதுமட்டுமல்லாமல் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு வழிபாடும் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலின் மாசி மாத திருவிழா 10 நாட்கள் நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுக்காகவே கொரோனா பரவலின் காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டிருந்தது. தற்போது தான் கொரோனா பரவல் முடிந்ததால் பிப்ரவரி 27 ஆம் தேதியில் இருந்து கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

கேரள பக்தர்கள் :

இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம். குறிப்பாக,பெண்கள் தலையில் இருமுடி கட்டை சுமந்து வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு செல்வதால் இது பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில்,பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கொடை திருவிழா இன்று நடைபெறவுள்ளது.

இன்று விடுமுறை :

இதனை முன்னிட்டு விழாவையொட்டி கன்னியாக்குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏப்ரல் 9 ஆம் தேதி 2-வது சனிக்கிழமை  பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.எனினும்,அரசின் சில முக்கிய பணிகளுக்காக  தலைமை கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்களில்  மட்டும்  இன்று செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!