தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா, ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்தது. இதையடுத்து, ஜனவரி 6-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஜனவரி 9-ம் தேதி முதல் ஞாயிறு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்ததால், ஞாயிறு ஊரடங்கு ஜனவரி 16, 23-ம் தேதிகளிலும் நீட்டிக்கப்பட்டது.
அதன் பிறகு, கரோனா பாதிப்பு குறைந்ததாலும், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதாலும், இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ஆகியவை ரத்து செய்யப்பட்டன. வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது.
undefined
பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏனெனில், தேர்தல் பரப்புரைக்காக அரசியல் கட்சிகள் சார்பில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டங்களில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது.எனவே ஊரடங்கில் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.