Tamilnadu Local Body Election Results: இது எதிர்பார்த்த ஒன்று தான்-தோல்வி காரணத்தை புட்டுபுட்டு வைத்த ஓபிஎஸ்

Nandhini Subramanian   | Asianet News
Published : Feb 22, 2022, 05:00 PM ISTUpdated : Feb 22, 2022, 05:07 PM IST
Tamilnadu Local Body Election Results: இது எதிர்பார்த்த ஒன்று தான்-தோல்வி காரணத்தை புட்டுபுட்டு வைத்த ஓபிஎஸ்

சுருக்கம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்விக்கான காரத்தை எடுத்துக் கூறி ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க. ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியின் படி உள்ளாட்சி தேர்தலை நடத்தியது. சில தினங்களுக்கு தமிழகத்தில் முன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

மாநிலம் முழுக்க பல்வேறு இடங்களில் ஆளும் கட்சியான திமுக அபார வெற்றி பெற்றது. இதை அடுத்து திமுக-வினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு உள்ளார். 

அதில், "தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான். இதன்மூலம் ஆளும்கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருக்கிறது. இந்தத் தேர்தல் நூறு விழுக்காடு சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றியை பெற்றிருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. நடந்து முடிந்த தேர்தல் என்பது முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல. 

'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிக்கேற்ப மக்களின் தீர்ப்புக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலை வணங்குகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேறே்றக் கழகத்திற்கும், அதன் தோழமைா கட்சிகளுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இந்தத் தருணத்தில் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இதற்கு முன்புகூட பல தோல்விகளை சந்தித்தாலும், அவற்றில் இருந்து மீண்டு வந்து மகத்தான வெற்றிகளை படைத்து இருக்கிறது.

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் - 
தர்மமே மறுபடியும் வெல்லும்"

என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மக்களின் உண்மையான மன நிலையையும், விருப்பத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக ரீதியான வாய்ப்பு விரைவில் அமையும். அந்த நன்னாள் வரும்போது மக்கள் சக்தி வெல்லும், மக்கள் விருப்பப்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றி பெறும். இது நிச்சயம் நடக்கும். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் எந்தவிதமான தொய்வும் இன்றி எப்போதும் போல் கழகப் பணியை மேற்கொள்ள வேண்டுமென்றும், மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." என குறிப்பிட்டு இருக்கிறார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!