
தமிழகம் முழுக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்தலில் பெரும்பாலான பகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற்று உள்ளது.
அந்த வகையில், கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட தேர்தலில் 23 இடங்களில் திமுக வெற்றி பெற்று இருக்கிறது. இந்த வெற்றியை திமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வந்தனர். மேளதாளங்கள் முழங்க ஆடி தங்களின் மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.
கொண்டாட்டத்தில் கிருஷ்ணகிரி 1 ஆவது வார்டு கோட்டை பகுதி வாக்குச் சாவடி திமுக முகவராக செயல்பட்ட 40 வயதான பயாஸ் ஈடுபட்டார். சக திமுக தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடிய பயாஸ் திடீரென மயங்கி நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பயாஸ் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
திமுக பிரமுகர் உயிரிழந்ததை அடுத்து கொண்டாடத்தில் மூழ்கிய அப்பகுதி சோகத்தில் ஆழ்ந்துள்ளது. திமுகவின் உற்பசாக கொகண்டாட்டமும் உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டது.