ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு 'TATO' ஆப்பை உருவாக்க ஏற்பாடுகள் செய்து வருகிறது.
தற்பொழுது, OLA மற்றும் Uber போன்ற தனியார் ஆட்டோ மற்றும் டாக்ஸி புக்கிங் ஆப்ஸ்கள் மக்கள் மத்தியில் மவுசு அதிகம். இதன் மூலம் அந்த தனியார் நிறுவனங்கள் ஓட்டுனர்களுக்கு குறைவான கட்டணம் கொடுத்தும், பயணிகளுக்கு அதிக கட்டணமும் வசூலித்து அதிக லாபத்தை ஈட்டி வருகின்றனர். இதனை தடுப்பதற்காக தமிழகத்தில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பாக அரசு புதிய செய்தியை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்த கோரிக்கையின் படி, சனிக்கிழமை அன்று ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில், போக்குவரத்து துறை அதிகாரிகள் முன்னிலையில், "Taxi'na" என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கும், ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தினருக்கும் கூட்டம் நடைபெற்றது.. அதில், ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய செயலி உருவாக்குவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டது.
undefined
அதன்படி, Taxi'na குழு முதன்மை செயலாளர் இது தொடர்பாக சுருக்கமான விளக்கத்தை அளித்தார். அதாவது, அந்த செயலியை எப்படி உருவாக்குவது, அதில் ஆட்டோ டாக்ஸி
பதிவு செய்வது எப்படி, அது மக்களுக்கு எப்படி உதவும், கமிஷன் என்ன, மக்கள் எப்படி அதை புக் செய்ய முடியும் என்பது போன்ற விளக்கங்கள் அளிக்கப்பட்டது. மேலும், அந்தக் கூட்டத்தில், தனியார் நிறுவனம் இதற்கான செயலியை உருவாக்கி நிர்வாகிக்கலாம் என்றும், அதன் முழு கட்டுப்பாடு தமிழக அரசின் கீழ் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, "TATO" என்ற புதிய செயலியை அந்த தனியார் நிறுவனம் தமிழக அரசுக்கு உருவாக்கி தர ஒப்புதல் அளித்துள்ளது. இந்த செயலி மூலம், ஓட்டுநர்கள் அல்லது பயணிகளிடமிருந்து அந்நிறுவனம் எந்தக் கமிஷனையும் வசூலிக்கக் கூடாது என்றும், மக்களுக்கும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நியாயமான முறையில் கட்டணம் மற்றும் வருமானம் நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.