கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

10:59 PM (IST) Dec 12
ரோலக்ஸ் கடிகாரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10:11 PM (IST) Dec 12
வரும் ஜனவரி 12ம் தேதி முதல் 15ம்தேதி வரை பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெற உள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
08:52 PM (IST) Dec 12
சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
08:15 PM (IST) Dec 12
மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, புதுச்சேரி மக்கள் மட்டுமில்லாது, பல மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் அன்பை பெற்றது என்று கூறியுள்ளார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.
07:19 PM (IST) Dec 12
மூன்று வருடங்களாக மூக்கில் மூச்சு விட முடியாமல் அவதிப்படும் இளம் பெண் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
07:06 PM (IST) Dec 12
பாலாற்றில் வெள்ளபெருக்கு காரணமாக 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
06:54 PM (IST) Dec 12
2023 ஆம் ஆண்டு பெரும் போர், வெப்பமயமாதல், செவ்வாய் கிரகத்தில் மனிதன் தரையிறங்குதல் என பல நடக்கும் என்று கணித்துள்ளார் நாஸ்டர்டாமஸ்.
06:15 PM (IST) Dec 12
நடிகர் ரஜினியின் பிறந்தநாளான இன்று, ஜெயிலர் படக்குழு அப்படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. முத்துவேல் பாண்டியனாக நடித்துள்ள ரஜினியின் மாஸான காட்சிகளும், அனிருத்தின் தெறிக்கவிடும் பின்னணி இசை உடன் கூடிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது மேலும் படிக்க
05:07 PM (IST) Dec 12
புதுச்சேரி அரசு தற்போது 165 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
03:39 PM (IST) Dec 12
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி வரும் சூழலில் கட்சியை யார் கைப்பற்றுவது எடப்பாடி பழனிசாமியா அல்லது ஓ.பன்னீர்செல்வமா ? என்ற கேள்வி எழுந்து வருகிறது.
03:27 PM (IST) Dec 12
ரஜினியின் பிறந்தநாளையொட்டி, லே மஸ்க் படம் பார்த்தபின் ரஜினி கொடுத்த ரியாக்ஷனை வீடியோவாக வெளியிட்டுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். அதில் படத்தை பார்த்து வியந்துபோன ரஜினி, வேறலெவல் சார் என சொல்லி ஏ.ஆர்.ரகுமானை கட்டிப்பிடித்து வாழ்த்தும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. மேலும் படிக்க
03:04 PM (IST) Dec 12
மாணவர்கள் நடத்திய பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று நாடகத்தை கண்டுகளித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
02:56 PM (IST) Dec 12
நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும், அடுத்து வரும் ஐந்து தினங்களுக்கு முக்கிய நிகழ்வு எதுவும் இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
02:45 PM (IST) Dec 12
கோயம்புத்தூரில் கடை திறப்பு விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த லெஜண்ட் சரவணன், தனது அடுத்த படம் குறித்தும், அரசியல் ஆர்வம் குறித்து பேசி உள்ளார். மேலும் படிக்க
02:40 PM (IST) Dec 12
தி.மு.க. அரசைக் கண்டித்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 13.12.2022 அன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டு 21.12.2022 அன்று காலை 10 மணியளவில் நடைபெறும் என அதிமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
01:57 PM (IST) Dec 12
ஆண்டிபட்டி அருகே உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அரிசியில் எலிக்குஞ்சுகள் இருந்ததால் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில்,ரேஷன் கடை ஊழியர்களிடம் பயணாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
01:52 PM (IST) Dec 12
மராட்டிய திரையுலகில் புகழ்பெற்ற பாடகியாக விளங்கிய சுலோச்சனா சவான் காலமானார். அவருக்கு வயது 92. பிரபல மராத்தி பாடகியான சுலோச்சனா சவான், தனது ஆத்மார்த்தமான லவானி நாட்டுப்புற பாடல்களுக்காக அறியப்பட்டவர். மேலும் படிக்க
01:49 PM (IST) Dec 12
வங்கக்கடலில் இருந்து சென்னையை நோக்கி ஆழ்மேகங்கள் நகர்ந்து வருவதால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் சஞ்சய் தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை தொடரும் என கூறியுள்ளார்.
01:27 PM (IST) Dec 12
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
01:02 PM (IST) Dec 12
கனமழை தொடர்வதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் உள்ள அனைத்து மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் இன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்வதை உறுதிபடுத்த வேண்டும் பள்ளி முதல்வர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
12:54 PM (IST) Dec 12
தொடர் மழையால் சென்னை குடிநீர் ஏரிகளான பூண்டி ஏரி, புழல் ஏரி, சோழவரம் ஏரி, கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் விவரம் வெளியாகியுள்ளது.
12:41 PM (IST) Dec 12
சென்னை மெட்ரோ ரெயில் முழுவதும் வாரிசு படத்தின் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, சென்னை முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகின்றன. மேலும் படிக்க
12:13 PM (IST) Dec 12
மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மேயர் பிரியா முதலமைச்சர் கான்வாய் வாகனத்தில் தொங்கிய படி சென்றது அதிகார துஷ்பிரயோகம் அல்ல. அதை அவரது துணிச்சலாக பார்க்க வேண்டும் என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
12:12 PM (IST) Dec 12
அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. விசாரணையின் முடிவில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
11:50 AM (IST) Dec 12
நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்வதற்காக அவரது ரசிகர்கள் ஏராளமானோர் சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின் முன்பு குவிந்து இருந்தனர். மேலும் படிக்க
11:20 AM (IST) Dec 12
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் விளம்பரங்களில் நடிக்க கூடாது என்பதை ஒரு பாலிசியாக பின்பற்றி வருகிறார். அது ஏன் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
11:01 AM (IST) Dec 12
சென்னை மெரினா கடற்கரையில் பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு நகை, பணம் பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்ற 4 பேரில் ஒருவரை போலீசார் விரட்டி சென்று பிடித்துள்ளனர்.
09:34 AM (IST) Dec 12
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
09:32 AM (IST) Dec 12
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கும் 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
09:31 AM (IST) Dec 12
ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் எஞ்சியுள்ள ஷூட்டிங்கை விரைவில் முடித்து வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளான இன்று ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
09:01 AM (IST) Dec 12
தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர உள்ளதாக ஒரு தகவல் பரவி வரும் வேளையில், தற்போது தனுஷ், ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் படிக்க
08:46 AM (IST) Dec 12
திமுக இளைஞர் அணி செயலாளராகவும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி வருகிற 14 ஆம் தேதி அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவருக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க..
08:34 AM (IST) Dec 12
திருமணம் ஆகி குழந்தைகளுக்கு தாய் ஆன பெண்கள் அழகு துறையில் சாதிக்க முடியுமா? என்ற கேள்வி பலருக்கு எழுந்திருக்கலாம். அதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறார் பிளாரன்ஸ் ஹெலன் நளினி. கோவையில் பிறந்த இவர் மனநல சிகிச்சை நிபுணர், தொழில் முனைவோர், எழுத்தாளர், யோகா பயிற்சியாளர் என இவருமைக்கு பல திறமைகள் உண்டு.
08:28 AM (IST) Dec 12
73-வது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கும் நிலையில், அவரது ஆரம்ப காலகட்டத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டபோது அவருக்கு உதவியவரை பற்றியும், அதற்கு நன்றிக்கடனாக ரஜினி செய்த உதவியை பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
08:16 AM (IST) Dec 12
திராவிட மாடல் முதல்வர், சென்னை மேயரை காரில் தொங்கி கொண்டு ஏற விட்டுள்ளார். கொடுமையிலும் கொடுமை பெருங்கொடுமை மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஓடி வந்து காரில் தொங்கி கொண்டு வருகிறார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
08:15 AM (IST) Dec 12
காசிமேட்டில் புயல் நிலவரங்களை பார்வையிட சென்ற முதல்வரின் வாகனத்தின் பின்னால் சென்ற வாகனத்தில் தொங்கியபடி சென்னை மாநகர மேயரும், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அவர்களும் சென்ற காட்சி அதிர்ச்சியளிக்கிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
08:14 AM (IST) Dec 12
கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகா, காஞ்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
07:59 AM (IST) Dec 12
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர அனைவரும் பக்கபலமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் 40க்கு 40 வெற்றி பெற அணைவரும் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.