இலையுதிர் காலம் போல எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம். யார் வேண்டுமானாலும் கட்சியில் இருந்து செல்லலாம். அத அவர்கள் முடிவு. கட்சியில் இருப்பதற்கும் விலகுவதற்கும் காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது என சீமான் கூறியுள்ளார்.

10:09 PM (IST) Feb 22
காங்கிரஸ் எம்பி சசி தரூருக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுதியான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. ராகுல் காந்தியுடனான சமீபத்திய சந்திப்பு இருந்தபோதிலும், தனது குறைகளையும் பரிந்துரைகளையும் நிவர்த்தி செய்வதில் உறுதிப்பாடு இல்லாததால் தரூர் அதிருப்தி அடைந்துள்ளார்.
மேலும் வாசிக்க: காங். கட்சியில் மரியாதை இல்லை; ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசிய சசி தரூர்!
06:19 PM (IST) Feb 22
ரிசரவ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பிரதமரின் இரண்டாவது முதன்மைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது தேர்வுக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான உத்தரவை பணியாளர் பயிற்சித் துறை (DoPT) சனிக்கிழமை பிறப்பித்தது. பி.கே. மிஸ்ரா செப்டம்பர் 11, 2019 முதல் பிரதமரின் முதன்மைச் செயலாளராக இருந்து வருகிறார்.
மேலும் படிக்க: ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பிரதமரின் முதன்மைச் செயலராக நியமனம்!
03:35 PM (IST) Feb 22
02:54 PM (IST) Feb 22
02:08 PM (IST) Feb 22
02:04 PM (IST) Feb 22
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால், மாணவர்களின் நலன் கருதி இரண்டு மாதங்களுக்கு பகலில் மின்தடை இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
01:08 PM (IST) Feb 22
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் உள்ளன. சினிமாவுக்கு வந்து பிரபலமாகிவிட்டாலே அவர்களை பற்றி கிசுகிசுக்கள் வந்துவிடும். அந்த வகையில் தற்போது மாதம்பட்டி ரங்கராஜும் காதல் கிசுகிசுவில் சிக்கி இருக்கிறார். அதன்படி மாதம்பட்டி ரங்கராஜும் அவருடைய ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டாவும் காதலித்து வருவதாக கூறி நெட்டிசன்கள் சில இன்ஸ்டா பதிவுகளை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
12:24 PM (IST) Feb 22
நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், காளியம்மாள் நாதக பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12:14 PM (IST) Feb 22
Sundeep Kishan Opens Up About Sinus Problems : சந்தீப் கிஷன் தனக்கு சைனஸ் பிரச்சனை இருப்பதாகக் கூறினார். இதனால் தலைவலி வருவதாகவும், இதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் ஊடகங்கள் இதை பெரிய பிரச்சனையாகக் காட்டுகின்றன.
11:56 AM (IST) Feb 22
இலையுதிர் காலம் போல எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம். யார் வேண்டுமானாலும் கட்சியில் இருந்து செல்லலாம். அத அவர்கள் முடிவு. கட்சியில் இருப்பதற்கும் விலகுவதற்கும் காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது என சீமான் கூறியுள்ளார்.
11:41 AM (IST) Feb 22
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நடிகை தமன்னா நடித்த ஒடேலா 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
11:19 AM (IST) Feb 22
Sye Raa Narasimha Reddy vs Chhaava : ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சாவா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் சாவாவை விட சிறந்த படம் என்று சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தை வர்ணித்து வருகின்றனர்.
10:29 AM (IST) Feb 22
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. திருமணத்திற்கு நகை வாங்க திட்டமிட்டவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
10:25 AM (IST) Feb 22
எந்திரன் படம் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த நடவடிக்கையால் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். நீதிமன்ற தீர்ப்பை நம்பாமல் வெறும் புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என இயக்குனர் ஷங்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்
09:55 AM (IST) Feb 22
Gajakesari Rajayoga Palan in Tamil : ஹோலி பண்டிகைக்கு முன்பு சந்திரன் மற்றும் குரு இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகுது. இதனால மேஷம், கடகம், கன்னி ராசிக்காரங்களுக்கு பண லாபம், வேலையில உயர்வு, சந்தோஷம் கிடைக்கும்.
09:41 AM (IST) Feb 22
Keerthy Suresh praises Dhanush for NEEK Movie : இப்படியொரு அழகான காதல் காட்சி பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்று தனுஷின் NEEK நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
09:40 AM (IST) Feb 22
Sani Sukra Serkai Palan in Tamil : வேத ஜோதிடத்தின் படி, சுக்கிரன் மற்றும் சனி ஆகியவை தனாத்ய யோகத்தை உருவாக்குகின்றன, இது சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கச் செய்யும்.
09:30 AM (IST) Feb 22
ரயில்வே சார்பில் இயக்கப்படும் விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது ஆதாரமற்றது. கடந்த மாதம் முதல் அனைத்து விரைவு ரயில்களிலும், முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டது. தமிழகத்தில் 14 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
09:23 AM (IST) Feb 22
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற நாளில் இருந்து டிரம்ப் ஆக்ரோஷமாக இருக்கிறார். புரட்சிகரமான முடிவுகளை எடுப்பதன் மூலம் உலக கவனத்தை ஈர்த்து வருகிறார். இதன் நடுவே இந்தியாவின் பொருளாதாரத்தை பார்த்து டிரம்ப் பயந்துவிட்டாரா என்ற சந்தேகம் எழ சில காரணங்கள் உள்ளன.
09:22 AM (IST) Feb 22
ஹோண்டா ஷைன் ஒரு ஸ்டைலான 125cc பைக் ஆகும். இது தினசரி பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றது. பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் மலிவு விலையில் கிடைக்கிறது.
09:21 AM (IST) Feb 22
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய-அமெரிக்க வழக்கறிஞர் காஷ் பட்டேலை எஃப்.பி.ஐ இயக்குனராக நியமித்தார். 44 வயதான படேல் வியாழக்கிழமை பதவி ஏற்று குடும்பத்துக்கு நன்றி தெரிவித்தார். அப்போ அவரோட காதலி அலெக்சிஸ் வில்கின்ஸும் லைம்லைட்ல இருந்தாங்க.
09:06 AM (IST) Feb 22
தனுஷ் இயக்கிய படம் என்பதால் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு மிகப்பெரிய அளவில் ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் செம பல்பு வாங்கி இருக்கிறது இப்படம். இப்படம் முதல் நாளில் ரூ.2 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் முதல் நாளில் ரூ.7.5 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
08:12 AM (IST) Feb 22
டிராகன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.6 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. உலகளவில் இப்படம் 7.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் லவ் டுடே படத்தின் முதல் நாள் சாதனையை முறியடித்து உள்ளார் பிரதீப். லவ் டுடே திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் ரூ.6 கோடி மட்டுமே வசூலித்து இருந்த நிலையில், டிராகன் திரைப்படம் அதைவிட 1.5 கோடி கூடுதலாக வசூலித்து மாஸ் காட்டி உள்ளது.
08:03 AM (IST) Feb 22
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
08:01 AM (IST) Feb 22
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். திமுகவினரே திருந்துங்கள், இல்லையென்றால் திருத்தப்படுவீர்கள் என பாஜக எச்சரித்துள்ளது.
07:30 AM (IST) Feb 22
மொழியின் பெயரால் பிரிவினை ஏற்படுத்துவதை கைவிடுங்கள். மொழியை வைத்து பிரிவினையை உருவாக்கும் முயற்சியை கைவிடுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தல். இந்திய மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
07:02 AM (IST) Feb 22
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற இனிமேல் மாநில அரசின் தடையில்லா சான்றை பெற தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.