Published : Feb 25, 2025, 07:08 AM ISTUpdated : Feb 26, 2025, 12:11 AM IST

Tamil News Live today 25 February 2025: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

சுருக்கம்

தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tamil News Live today 25 February 2025: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

12:11 AM (IST) Feb 26

டிரம்ப் எலான் மஸ்க்கின் காலில் முத்தமிடுவது போல் AI வீடியோ!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் காலில் முத்தமிடுவது போல செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ அமெரிக்க அரசு கட்டிடத்தில் ஒளிபரப்பானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

11:23 PM (IST) Feb 25

த.வெ.க. ஆண்டு விழாவில் விஜய் பேசப்போவது என்ன? பிரசாந்த் கிஷோர் சொன்ன அட்வைஸ்!

Vijay and Prashant Kishor in TVK anniversary: நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. விழாவில் விஜய் பேசவேண்டிய கருத்துகள் குறித்து பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கியுள்ளார். முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

10:46 PM (IST) Feb 25

வெளிநாட்டில் படித்து அங்கேயே செட்டில் ஆக ஆசையா? டாப் 10 நாடுகள் இதோ!

உயர்கல்வி மற்றும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு என்பது இப்போது பல இந்தியர்களின் கனவாக உள்ளது. அத்தகையவர்களுக்கு எந்த நாட்டில் என்ன மாதிரியான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். இந்திய மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும் அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உட்பட 10 நாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் படிக்க

10:11 PM (IST) Feb 25

டைட்டாக ஜீன்ஸ் அணிபவரா நீங்கள்? இதை கவனிக்க மறந்துடாதீங்க

இளைஞர்கள் பலரும் விரும்பி அணியும் உடையாக இருப்பது ஜீன்ஸ் தான். இதில் பல ரகங்கள் இருந்தாலும், உடலை கச்சிதமாக காட்ட வேண்டும் என்பதற்காக பலரும் டைட் ஜீன்ஸ் அணிவதை ஃபேஷனாக வைத்துள்ளார்கள். ஆனால் இது போன்ற டைட் ஜீன்ஸ்களை தொடர்ந்து அணிவதை வழக்கமாக கொண்டிருந்தால் அது பலவிதமான உடல் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க

09:56 PM (IST) Feb 25

இவங்க எல்லாம் மறந்தும் தர்பூசணி சாப்பிடக் கூடாது

தர்பூசணி வெயில் காலத்தில் ஏற்ற உணவாகும். பலரும் விரும்பி சாப்பிடக் கூடியது. உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாப்பதற்காக பலரும் இந்த பழத்தை சாப்பிடுகிறார்கள். ஆனால் அனைவரும் தர்பூசணி சாப்பிடக் கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா? சில நபர்கள் கண்டிப்பாக தர்பூசணி சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

மேலும் படிக்க

09:51 PM (IST) Feb 25

அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்! விரைவில் முக்கிய அறிவிப்பு!

மத்திய அரசு 8வது சம்பள கமிஷனை அறிவித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் உயர வாய்ப்புள்ளது. ஃபிட்மென்ட் காரணி அடிப்படையில் 40-50% வரை சம்பளம் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

09:50 PM (IST) Feb 25

தொகுதி மறுவரையறை மூலம் மக்களவையில் என்ன மாற்றம் வரும்?

Carnegie Endowment Delimitation Estimates: 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தமிழ்நாடு, கேரளாவுக்கு தலா 8 தொகுதிகள் வரை இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மாநில உரிமைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க

09:07 PM (IST) Feb 25

நடனத்தில் அப்பா பிரபுதேவாவுக்கே டஃப் கொடுத்த மகன் ரிஷி ராகவேந்திரா! வைரல் வீடியோ!

சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற தனது முதல் நடன நிகழ்ச்சியில் தன்னுடைய மகன் ரிஷி ராகவேந்தர் தேவாவை பிரபுதேவா அறிமுகப்படுத்தியுள்ளார்.
 

மேலும் படிக்க

09:00 PM (IST) Feb 25

தினமும் உடற்பயிற்சி செய்தும் எடை குறையலியா? அப்போ இது தான் காரணம்

உணவு கட்டுப்பாடு இல்லாமல் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பவர்கள் தேர்வு செய்யும் முறை உடற்பயிற்சி தான். சிலருக்கு தினமும் உடற்பயிற்சி, வாக்கிங் என எதை செய்தாலும் உடல் எடை குறையாமல் இருப்பதுடன், அதிகரிக்கவும் செய்து விடும். இதற்கு என்ன காரணம் என தெரிந்து கொள்ள வேண்டுமா? வாங்க தெரிந்து கொள்ளலாம். 
 

மேலும் படிக்க

08:30 PM (IST) Feb 25

நாக சைதன்யாவின் 'தண்டேல்' ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

நடிகர் நாகசைதன்யா நடிப்பில், வெளியான தண்டேல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
 

மேலும் படிக்க

08:16 PM (IST) Feb 25

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

வாழைப்பழம் அனைவரும் வாங்கி சாப்பிடக் கூடிய எளிமையான பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக் கூடிய உணவு. ஆனால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாமா? வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையுமா அல்லது கூடுமா? பலருக்கும் இருக்கும் இந்த சந்தேகத்திற்கான விடையை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

08:13 PM (IST) Feb 25

வாஸ்து: கிச்சனில் இந்த '4' பொருட்களை காலியாக வைக்காதீங்க; செல்வம் தாங்காது!

Vastu Tips For Kitchen : வாஸ்து சாஸ்திரத்தின் படி சமையலறையில் சில பொருட்கள் காலியாக இருக்கக் கூடாது. இல்லையெனில் வீட்டில் செல்வம் குறையும்.

மேலும் படிக்க

08:11 PM (IST) Feb 25

விளையாட்டு பணக்காரர்களுக்கு மட்டும் சொந்தமா? பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் கேள்வி

Pullela Gopichand Interview: பேட்மிண்டன் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த், விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். போதிய ஆதரவு இல்லாவிட்டால், விளையாட்டு ஒரு சவாலான தொழிலாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

08:08 PM (IST) Feb 25

குழந்தைகளுடன் ரயிலில் இலவச பயணம்! இந்த வயது வரை ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டாம்!

இந்திய ரயில்வேயில் குழந்தைகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகள் உள்ளன. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் தேவையில்லை. 5 முதல் 12 வயது வரை அரை டிக்கெட் எடுக்க வேண்டும், ஆனால் பெர்த் கிடைக்காது. 13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு டிக்கெட் எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க

08:05 PM (IST) Feb 25

சர்க்கரை நோயாளிகள் பிளாக் காபி குடித்தால் நல்லதா? கெட்டதா?

பிளாக் காபி நல்லது தான். ஆனால் அனைவருக்கும் நல்லது தானா என்று கேட்டால், அது மில்லியன் டாலர் கேள்வி தான். ஒவ்வொருவரின் உடல் தன்மைக்கு ஏற்றவாறும், நோய்க்கு ஏற்றவாறும் பிளாக் காபியின் நன்மை-தீமைகள் மாறுபடும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஏற்றதா? சர்க்கரை நோயாளிகள் பிளாக் காபியை எப்படி குடித்தால் நன்மைகள் கிடைக்கும் என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க

07:47 PM (IST) Feb 25

Silk Smitha: அப்பாவுடன் தொடர்பு; மகனுடன் திருமணத்துக்கு தயாரான சில்க் ஸ்மிதா - ஷாக் கொடுத்த நடிகை!

சில்க் ஸ்மிதா ராதாகிருஷ்ணன் என்பவருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.  ஆனால், சில்க் ஸ்மிதா அவருடைய மகனையே திருமணம் செய்யவிருந்தார் என்று நடிகை ஜெயசீலா அதிர்ச்சி தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
 

மேலும் படிக்க

07:34 PM (IST) Feb 25

இந்தியாவைப் போல ரூபாயை பயன்படுத்தும் நாடுகள்!

Countries that have rupees as a currency: இந்தியாவைப் போலவே இன்னும் பல நாடுகள் தங்கள் நாட்டுப் பணத்தை ரூபாய் என்று அழைக்கின்றன. அந்த நாடுகள் எவை என்று தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க

07:13 PM (IST) Feb 25

வேலைக்கு போகும் அம்மாக்களின் மன அழுத்தத்தை குறைக்க 5 சூப்பர் டிப்ஸ்!!

Stress Relief For Working Mothers : வேலைக்கு போகும் தாய்மார்கள் அலுவலகம் மற்றும் வீட்டின் மன அழுத்தத்தை சமாளிக்க ஐந்து வழிகள் இங்கே.

மேலும் படிக்க

07:13 PM (IST) Feb 25

மகா சிவராத்திரி: ஆதியோகி, 63 தேர்களுடன் ஈஷாவிற்கு பாதயாத்திரை வந்த சிவனடியார்கள்!

ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி தேர்களுடன் நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் ஈஷா யோக மையத்தை வந்தடைந்தனர். அவர்களுக்கு ஆலாந்துறை முதல் ஈஷா யோக மையம் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க

07:13 PM (IST) Feb 25

துளசியை தினமும் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா ?

துளசி இலைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இவை உடலுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உடல் எடையை குறைக்க உதவுமா? தினமும் துளசி இலைகளை சாப்பிடுவது நல்லதா? எந்த முறையில் துளசி இலைகளை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதற்கான பதிலை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

07:02 PM (IST) Feb 25

ஆப்பிள் சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது என்று உங்களுக்கு தெரியுமா?

ஆப்பிள் ஒரு அற்புதமான பழமாகும். ஆனால் அதை சரியான நேரத்தில் உண்பதன் மூலம் அதன் முழு நன்மைகளை அனுபவிக்க முடியும்.சரியான உணவு பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கும்போது மட்டுமே உணவின் முழு பலன்களும் கிடைக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்க ஆப்பிளை எந்த நேரத்தில் சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

06:56 PM (IST) Feb 25

பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்!

06:51 PM (IST) Feb 25

அஜித்தை மிஞ்சிய பிரதீப்; பாக்ஸ் ஆபிஸில் விடாமுயற்சியை ஓட ஓட விரட்டிய டிராகன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தை விட பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் அதிக வசூலை வாரிக்குவித்து கெத்து காட்டி வருகிறது.

மேலும் படிக்க

06:48 PM (IST) Feb 25

30 வயதை கடந்த பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

 30 வயது கடந்த பெண்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வயதில் சில உணவுகளை உட்கொள்வதை குறைக்க வேண்டும். அவை என்னவென்று பார்ப்போம்.

மேலும் படிக்க

06:42 PM (IST) Feb 25

காபி கெட்ட 'கொழுப்பை' கரைக்கும் தெரியுமா? பலரும் அறியாத '5' வகை காபி!!!

Belly Fat Reducing Coffee : உடலை ஆரோக்கியமாக வைக்க, கொழுப்பைக் குறைக்க உதவும் 5 வகையான காபி குறித்து இங்கு காணலாம். 

மேலும் படிக்க

06:38 PM (IST) Feb 25

ஏசி பெட்டியில் அதிக வருவாய் அள்ளிய ரயில்வே! ஸ்லீப்பர் கோச் புக்கிங் சரிவு!

Indian Railways Revenue in 3rd AC vs Sleeper: கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு இந்திய ரயில்வேயில் 3வது ஏசி பெட்டியில் பயணிகள் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வருவாய் ஸ்லீப்பர் வகுப்பை விட அதிகமாக உள்ளது. ரயில் பயணப் போக்குகளில் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க

06:34 PM (IST) Feb 25

உங்கள் பகுதியில் BSNL 4G டவர் இருக்கிறதா என்பதை எப்படி செக் செய்வது? முழு விவரம்!

உங்கள் பகுதியில் BSNL 4G டவர் இருக்கிறதா என்பதை எப்படி செக் செய்வது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க

06:28 PM (IST) Feb 25

Pandian Stores: கதிரை தேடி வந்த போலீஸ்; உண்மை வெளியே வரும் தருணம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய அப்டேட்!

இன்றைய தினம், கதிரவனை தேடி போலீஸ் வீட்டுக்கு வந்த நிலையில், கோமதிக்கு எல்லா உண்மைகளும் தெரியவருகிறது. இதுகுறித்த அப்டேட்டை தற்போது பார்ப்போம்.
 

மேலும் படிக்க

06:22 PM (IST) Feb 25

ரூ.60,000 சம்பளம்! தூத்துக்குடி துறைமுக ஆணையத்தில் வேலை! எப்படி விண்ணப்பிப்பது?

தூத்துக்குடி V.O. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் ஆலோசகர்கள், இளம் வல்லுநர்கள் உட்பட 18 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மார்ச் 20, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் படிக்க

06:15 PM (IST) Feb 25

மகாசிவராத்திரி பிரயாக்ராஜ் போக்குவரத்து மாற்றம்: பக்தர்களின் வருகை காரணமாக போக்குவரத்தில் மாற்றம்!

05:53 PM (IST) Feb 25

ஐபிஎல் 2025: சிஎஸ்கே முதல் கேகேஆர் வரை! அனைத்து அணிகளின் வீரர்கள் பட்டியல்!

ஐபிஎல் 2025 மார்ச் 22ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது. ஐபிஎல் போட்டிகளின் விளையாடும் அனைத்து அணிகளின் வீரர்கள் பட்டியலை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க

05:48 PM (IST) Feb 25

Govinda Net Worth: 61 வயதில் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் கோவிந்தாவின் சொத்து மதிப்பு!

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான கோவிந்தா, தன்னுடைய மனைவி சுனிதாவை 61 வயதில், விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து அவரை பற்றிய பல தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இவருடைய சொத்து மதிப்பு குறித்து பார்ப்போம்.
 

மேலும் படிக்க

05:44 PM (IST) Feb 25

இன்று இரவு கோவை வரும் மத்திய உள்துறை அமித்ஷா! எந்தெந்த நிகழ்ச்சியில் கலந்த கொள்கிறார்!

மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கோவை வருகை தந்து பாஜக புதிய அலுவலகத்தை திறந்து வைக்கிறார். மேலும், ஈஷா மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார். இதனையொட்டி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

05:39 PM (IST) Feb 25

காதல் படங்களின் காட்ஃபாதர்! கெளதம் மேனன் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?

தமிழ் சினிமாவில் பல கிளாசிக் ஹிட்டான ரொமாண்டிக் படங்களை இயக்கியதன் மூலம் பேமஸ் ஆன இயக்குனர் கெளதம் மேனன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க

05:35 PM (IST) Feb 25

வசூல் வேட்டை நடத்தும் பாலிவுட் ரீ-ரிலீஸ் படம்! மவுசு குறையாத காதல் கதை!!

Sanam Teri Kasam Re-Release Box Office Collection: "சனம் தேரி கசம்" திரைப்படம் ரீ-ரிலீஸில் யாரும் எதிர்பாராத அளவுக்கு ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 2016-ல் வெளியானபோது வரவேற்பு பெறாத இப்படம், தற்போது ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க

05:27 PM (IST) Feb 25

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை பெய்து வருகிறது. அதேபோல் மேலவளவு, சென்னகரம்பட்டி, எட்டிமங்கலம், கீழையூர் ஆகிய இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்குடியை குளிர்வித்த மிதமான மழை பெய்துள்ளது. 

05:24 PM (IST) Feb 25

ரூ.5 கோடி முறைகேடு: தபால் ஊழியர் கைது

அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் தனிநபர் சேமிப்புக் கணக்கிற்கு வரவு வைத்து ரூ.5 கோடி முறைகேடு செய்த தபால்நிலைய உதவியாளர் அமர்நாத் கைது செய்யப்பட்டுள்ளார். அமர்நாத்திடமிருந்து ரூ.4.58 லட்சத்தை மீட்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

05:23 PM (IST) Feb 25

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டம்? 10 பேர் கைது

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட தந்தை பெரியார் திராவிடக் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை ராயப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்து பெட்ரோல் குண்டு வீச நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு செல்ல முயன்றபோது போலீசார் கைது செய்துள்ளனர்.

04:58 PM (IST) Feb 25

பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் காற்று மாசுபாடு கட்டுப்பாட்டில் புதிய சாதனை!

04:50 PM (IST) Feb 25

ஹெல்மெட் அணிந்தால் முடி உதிர்வு ஏற்படுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

ஹெல்மெட் அணிவதால் முடி உதிர்தல் ஏற்படுமா என்ற கேள்விக்கு நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர். ஹெல்மெட் அணிவது சுகாதாரக் கவலைகளை ஏற்படுத்தினாலும், முடி உதிர்தலுக்கு நேரடி காரணமில்லை. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் முடி உதிர்தலைத் தடுக்கலாம்.

மேலும் படிக்க

More Trending News