டெல்லி பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் டெல்லி முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 27 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியில் பாஜக ஆட்சியில் அமருகிறது.

11:30 PM (IST) Feb 19
2025 டெல்லி தேர்தலில் முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா புதன்கிழமை டெல்லி முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு, கல்வித் தகுதி, குடும்பப் பின்னணி ஆகியவை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
மேலும் படிக்க: டெல்லி முதல்வராகும் ரேகா குப்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
08:15 PM (IST) Feb 19
07:13 PM (IST) Feb 19
06:57 PM (IST) Feb 19
05:43 PM (IST) Feb 19
Pawan Kalyan Takes Holy Dip at Prayagraj Mahakumbh 2025 : ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளார். இதை தனது வாழ்க்கையின் ஒரு புனிதமான தருணமாக கருதுவதாக குறிப்பிட்டார்.
04:53 PM (IST) Feb 19
Mahakumbh Mela 2025 : மகாகும்பம் 2025: 144 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த அரிய சந்தர்ப்பத்தில், தந்தை மகள் இருவரும் 675 கி.மீ சைக்கிளில் பயணித்து சங்கமத்தில் புனித நீராடினர்.
03:48 PM (IST) Feb 19
Morne Morkel Father Passed Away : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடங்கி நடைபெற்று வுரும் நிலையில் இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்கல் அவசர அவசரமாக இப்போது அவருடைய நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
03:46 PM (IST) Feb 19
02:13 PM (IST) Feb 19
02:11 PM (IST) Feb 19
02:00 PM (IST) Feb 19
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம். மதுரா செந்தில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
01:04 PM (IST) Feb 19
ஃபெஞ்சல் புயலால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, ரூ.37,000 கோடி நிவாரணம் கோரிய நிலையில், மத்திய அரசு ஆந்திரா, நாகாலாந்து உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளது.
12:35 PM (IST) Feb 19
கார்த்திகை தீபம் சீரியலில், இன்று சாமுண்டீஸ்வரி அபிராமியை சந்தித்த நிலையில்... அவளால் கண்டு பிடிக்க முடியாமல் போகிறது. என்ன நடந்தது என்பது பற்றி பார்ப்போம்.
12:34 PM (IST) Feb 19
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் அஜித் - விஜய் இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவி வந்தாலும், தளபதியின் வசூலை அஜித்தால் முறியடிக்க முடியவில்லை. கடந்த 5 வருடங்களில் அஜித் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் மற்றும் அதன் வசூலை பார்ப்போம்.
12:27 PM (IST) Feb 19
பிரம்மா மற்றும் சர்ஜுன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி ஓடிடியில் சக்கைப்போடு போட்ட வெப் தொடர் தான் சுழல். இந்த வெப் தொடரின் கதையை புஷ்கர் - காயத்ரி எழுதி தயாரித்து இருந்தனர். அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட்டான இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில், சுழல் 2 வெப் தொடரின் விறுவிறுப்பான டிரைலர் தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது.
11:53 AM (IST) Feb 19
2024ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள், புயல் ஆகியவற்றிற்காக உயர்மட்டக் குழு பரிந்துரையின்படி ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலங்கானா, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு ரூ.1554.99 கோடி கூடுதல் நிதி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்காக பேரிடர் நிதி வழங்க கோரிக்கை வைத்தும், தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
11:44 AM (IST) Feb 19
தமிழில் டாப் ஹீரோயினாக வலம் வந்தபோது அஜித்துக்கு ஜோடியாக அவள் வருவாளா, வாலி மற்றும் உன்னைக் கொடு என்னை தருவேன் ஆகிய மூன்று படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இணைந்து நடிக்காமல் இருந்த இந்த ஜோடி தற்போது 25 ஆண்டுகளுக்கு பின்னர் குட் பேட் அக்லி படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. மேலும் படிக்க
11:13 AM (IST) Feb 19
நடிகர் விஜய்யின் தவெக இளைஞரணி அலுவலகத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10:56 AM (IST) Feb 19
மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு தவறிவிட்டதாகவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
10:04 AM (IST) Feb 19
இந்தியாவில் வாக்காளர் வாக்குப்பதிவுக்கு அமெரிக்கா வழங்கவிருந்த $21 மில்லியன் நிதியை ரத்து செய்ததற்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரம் கொண்ட நாட்டிற்கு இது தேவையில்லை என்றும், அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிப்பது என்றும் அவர் கூறியுள்ளார்.
10:03 AM (IST) Feb 19
புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் வீடியோவைப் பற்றிய எலான் மஸ்க்கின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மஸ்க்கின் கருத்துக்கள் பழமைவாத பிரிவினரால் பாராட்டப்பட்டாலும், மனித உரிமை ஆர்வலர்கள் அவரை உணர்ச்சியற்றவர் என்று விமர்சிக்கின்றனர்.
09:59 AM (IST) Feb 19
பாலிவுட் நடிகர் அமீர் கானின் தாயார் உடல்நல குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
09:42 AM (IST) Feb 19
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் முதன்முறையாக கூட்டணி அமைத்த படம் விடாமுயற்சி. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் அர்ஜுன், ரெஜினா கசெண்ட்ரா, ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் படிக்க
09:04 AM (IST) Feb 19
Sukran Meena Rasi Peyarchi 2025 Palan : ஜோதிடக் கணக்கின்படி, சுக்கிரன் தற்போது மீன ராசியில் சஞ்சரிக்கிறார். அவர் இந்த ராசியில் மொத்தம் 124 நாட்கள் தங்கி, மே 31, 2025 அன்று மேஷ ராசிக்குள் நுழைவார்.
08:38 AM (IST) Feb 19
வேலூரில் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
08:33 AM (IST) Feb 19
இந்திய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பியூர் ஈவி, ஜியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து புதிய எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க உள்ளன.
08:33 AM (IST) Feb 19
சொத்து வாங்கும் அல்லது விற்கும் போது ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க, பதிவேடு, கட்டௌனி, வரைபடம், என்ஓசி, உரிமைப் பத்திரம், வில்லங்கச் சான்றிதழ் மற்றும் பினாமா போன்ற முக்கிய ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும். சொத்து விற்பனையாளர் ஆவணங்களைக் காட்ட மறுத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பதிவு செய்யும் போது விற்பனைப் பத்திர விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.
08:32 AM (IST) Feb 19
எட்டாவது ஊதியக் குழு அறிவிப்புக்குப் பிறகு, ஊழியர்களிடையே சம்பள உயர்வு குறித்த உற்சாகம் நிலவுகிறது. குறைந்தபட்ச சம்பளம் ரூ.51,000 மற்றும் ஓய்வூதியம் ரூ.25,000 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
07:52 AM (IST) Feb 19
ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் அட்லீக்கு பாலிவுட்டில் மவுசு அதிகரித்தது. அவர் இயக்கத்தில் நடிக்க பாலிவுட் நடிகர்கள் வரிசைகட்டி காத்திருக்கிறார்கள். அந்த வகையில் அவர் சல்மான் கான் உடன் இணைந்து பிரம்மாண்ட படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அப்படத்தை வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டுவிட்டு, டோலிவுட்டுக்கு தாவி இருக்கிறார் அட்லீ. அவர் இயக்க உள்ள அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க உள்ளாராம். மேலும் படிக்க
07:37 AM (IST) Feb 19
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.498.8 கோடி நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
07:29 AM (IST) Feb 19
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாத அளவுக்கு கடும் பனிப்பொழிவாக இருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். அதேபோல் தலைநகர் சென்னையிலும் இதே நிலையே நீடிக்கிறது.
07:06 AM (IST) Feb 19
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்க உள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் நியூசிலாந்த அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கராச்சி நேஷனல் ஸ்டேடியத்தில் மதியம் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.