இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

08:01 AM (IST) Oct 31
Assistant cum computer operator jobs : சென்னை மத்திய மண்டல குழந்தைகள் நல குழுவில், கணினி இயக்குபவர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, 42 வயதுக்குட்பட்டவர்கள் இந்த தொகுப்பூதிய பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
11:22 PM (IST) Oct 30
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இணைந்த ஓபிஎஸ், டிடிவி தினகரன், புதிய தலைமை நீதிபதி நியமனம், H-1B விசா விதிகளை மாற்றிய அமெரிக்கா, மகளிர் உலகக் கோப்பை பைனலில் இந்தியா உள்ளிட்டவை இன்றைய TOP 10 செய்திகளில் உள்ளன.
11:08 PM (IST) Oct 30
பிறந்தநாளைக் கொண்டாடிய தனது 'பேபி கேர்ள்' அனன்யா பாண்டே மீது பாவனா பாண்டே அன்பைப் பொழிந்துள்ளார்.
11:01 PM (IST) Oct 30
Aishwarya Rai Love Affairs: பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் நவம்பர் 1 ஆம் தேதி தனது 52வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். இத்தனை ஆண்டுகளில் பல பிரபலங்களுடன் அவர் காதல் வயப்பட்டுள்ளார். அவரது காதல் பட்டியல் இதோ..
10:59 PM (IST) Oct 30
மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் 339 ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்த இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. ஜெமீமா சாதனை சதம் விளாசினார்.
10:28 PM (IST) Oct 30
மத்திய ரயில்வேயின் பெண் டிக்கெட் பரிசோதகர் ரூபினா அகிப் ஒரே நாளில் 150 டிக்கெட் எடுக்காத நபர்களிடம் இருந்து ரூ.45,000 அபராதம் வசூலித்து அசத்தியுள்ளார்.
10:21 PM (IST) Oct 30
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், தனது இந்து மனைவி உஷா வேன்ஸ் ஒருநாள் கிறிஸ்துவ மதத்தைத் தழுவ வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவரது நம்பிக்கையை மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
09:50 PM (IST) Oct 30
ஆஸ்திரேலியாவில் கழுத்தில் பந்து தாக்கி 17 வயது இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் ஃபில் ஹியூக்ஸ் பந்து தாக்கி இறந்ததை நினைவுப்படுத்தியுள்ளது.
09:44 PM (IST) Oct 30
கேரள முதல்வர் பினராயி விஜயன், அரசின் எந்த நலத்திட்ட உதவியும் பெறாத 35 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதிய மகளிர் பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார். வரவிருக்கும் தேர்தல்களை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
09:25 PM (IST) Oct 30
SS Rajamouli Revealed Baahubali 3 Budget : பாகுபலி: தி எபிக் ரிலீஸை முன்னிட்டு பாகுபலி 3 பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு எழுந்தது. இதுகுறித்து ராஜமௌலி பேசி பட்ஜெட் விவரங்களை வெளியிட்டுள்ளார்.
08:52 PM (IST) Oct 30
சென்னையை சேர்ந்த இளம்பரிதி 16 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
08:39 PM (IST) Oct 30
டிரம்ப் நிர்வாகம் H-1B விசா கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளதுடன், வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் (EAD) தானியங்கி நீட்டிப்பு முறையையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.
08:35 PM (IST) Oct 30
NABFINS நபார்டின் துணை நிறுவனமான NABFINS-இல் Customer Service Officer (CSO) பணிக்கு 12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை, நேர்காணல் மூலம் தேர்வு. சம்பளம் ரூ.30,000 வரை.
08:30 PM (IST) Oct 30
Chennai Metro Rail Jobs 2025 சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL)-இல் Supervisor, Technician வேலைக்கு டிப்ளமோ, ITI படித்தோர் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹30,000 வரை. விண்ணப்பக் கட்டணம் இல்லை. நேரடி நேர்காணல்!
08:25 PM (IST) Oct 30
Karthik saves his mother in law in Karthigai Deepam 2 : தனக்கு நேர இருந்த ஆபத்தில் சிக்க இருந்த தனது மாமியார் சாமுண்டீஸ்வரியை பட்டாசு விபத்திலிருந்து முன்னெச்சரிக்கையாக கார்த்திக் காப்பாற்றியுள்ளார்.
08:24 PM (IST) Oct 30
Motu Patlu Comics CBSE மற்றும் வருமான வரித்துறை இணைந்து மோட்டு பட்லு காமிக்ஸ் (5 மொழிகளில்) மூலம் குழந்தைகளுக்கு வரி செலுத்துவதன் அவசியம், நேர்மை மற்றும் பொறுப்புள்ள குடிமகனாக இருப்பது குறித்துக் கற்றுக்கொடுக்கிறது.
08:19 PM (IST) Oct 30
RRB JE Recruitment ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர் (JE) உட்பட 2,569 பணியிடங்களுக்கு RRB அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சம்பளம் ₹35,400. விண்ணப்பப் பதிவு அக்டோபர் 31, 2025 முதல் தொடங்குகிறது.
08:18 PM (IST) Oct 30
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக களமிறங்கியுள்ள சசிகலா, அதிமுகவில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று ட்விஸ்ட் வைத்து பேசியுள்ளார். இது இபிஎஸ்க்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
08:13 PM (IST) Oct 30
Adobe Firefly Adobe நிறுவனம் Firefly-இன் புதிய AI கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆடியோ, வீடியோ எடிட்டர், தமிழ் மொழிக்கான குரல் உருவாக்கம் உட்பட பல்வேறு வசதிகள் உள்ளன. படைப்பாளிகளுக்கு ஒரு புதிய புரட்சி!
08:01 PM (IST) Oct 30
Grammarly rebranded கிராமர்லி (Grammarly) நிறுவனம் Superhuman எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இது AI உதவியுடன் எழுத்து, இமெயில் போன்ற பணிகளை ஒருங்கிணைக்கும் புதிய உற்பத்தித் திறன் கருவியாகும்.
07:51 PM (IST) Oct 30
WhatsApp profile வாட்ஸ்அப் ப்ரொபைலில் கவர் போட்டோ சேர்க்கும் புதிய அம்சம் விரைவில் வெளியாகிறது. தனியுரிமை அமைப்புகள் மூலம் கட்டுப்படுத்தலாம். இளம் பயனர்களை ஈர்க்கும் இந்த அம்சம், தற்போது ஆண்ட்ராய்டு பீட்டாவில் சோதனை செய்யப்படுகிறது.
07:43 PM (IST) Oct 30
Nothing Phone 3a Lite நத்திங் போன் 3a லைட் உலகளவில் அறிமுகம். இதன் விலை சுமார் ₹25,000. இதில் 50MP கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 120Hz AMOLED டிஸ்ப்ளே உள்ளது. விரைவில் Flipkart-இல் கிடைக்கும்.
07:36 PM (IST) Oct 30
உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சூர்ய காந்த், இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் நவம்பர் 24, 2025 அன்று பதவியேற்பார். சட்டப்பிரிவு 370 உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் இவர் தீர்ப்பளித்த அமர்வில் அங்கம் வகித்துள்ளார்
07:28 PM (IST) Oct 30
Women's World C 2025: upமகளிர் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் குவித்துள்ளது. ஃபோப் லிட்ச்பீல்ட் அதிரடி சதம் விளாசினார்.
07:11 PM (IST) Oct 30
மாதம்பட்டி ரங்கராஜ் மீது மோசடி புகார் கொடுத்திருந்த நிலையில் இப்போது தனக்கு மாதம் மாதம் ரூ.6.50 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.
10:03 AM (IST) Oct 31
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர் தொகுதிகளை தன் வசமாக்கியது திமுக. கடந்த தேர்தலில் வாணியம்பாடி தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்ததால் திமுக தோற்றது.
06:53 PM (IST) Oct 30
மும்பையின் போவாய் பகுதியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில், வெப் சீரிஸ் ஆடிஷன் எனக்கூறி 17 குழந்தைகள் உட்பட 19 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்த நபர், போலீஸாருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவாளியின் நோக்கம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
06:34 PM (IST) Oct 30
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை சர்ச்சையாக பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
06:18 PM (IST) Oct 30
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தென்கொரியாவில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, அரிய மண் தாதுக்கள் விநியோகம் தொடர்பான முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டு, வர்த்தகப் பதற்றங்கள் தணிக்கப்பட்டுள்ளன.
06:06 PM (IST) Oct 30
எண் கணிதத்தின் படி, ரேடிக்ஸ் எண் 2 கொண்டவர்களின் பலவீனங்கள். அதனால் அவர்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து இங்கு காணலாம்.
05:59 PM (IST) Oct 30
கேரள மாநில லாட்டரித் துறையின் காருண்யா பிளஸ் (Karunya Plus KN 595) லாட்டரி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. வெற்றியாளர்கள் தங்கள் பரிசுத் தொகையை 30 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் லாட்டரி அலுவலகத்தில் கோரலாம்.
05:51 PM (IST) Oct 30
Thangamayil Plan against Saravanan : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கண்மூடித்தனமாக மருமகளை நம்பியதால் சரவணனின் வாழ்க்கை தான் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
05:40 PM (IST) Oct 30
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில், மாந்திரீகம் செய்ய மறுத்த மனைவி முகத்தில் கணவர் சூடான மீன் குழம்பை ஊற்றியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்த மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், தலைமறைவான கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
05:39 PM (IST) Oct 30
லெக்சஸ், ஜப்பான் மோபிலிட்டி ஷோ 2025ல் தனது புதிய கன்செப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆறு சக்கரங்கள் மற்றும் மூன்று அசல் அமைப்புடன், இந்த வாகனம் "புதிய லக்சுரி ஸ்பேஸ்" என அழைக்கப்படுகிறது.
05:28 PM (IST) Oct 30
இந்தியாவில் மிகவும் பிரபலமான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350, அதன் வடிவமைப்பு மற்றும் செயல்திறனால் அதிகம் விற்பனையாகிறது. தற்போதைய சலுகைகளால் இதை வாங்குவது எளிதாகியுள்ளது.
05:26 PM (IST) Oct 30
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்துள்ளதாகவும், திமுக அரசு கல்வியை பின்னுக்கு தள்ளிவிட்டதாகவும் அண்ணாமலை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
05:17 PM (IST) Oct 30
உலக உற்பத்தியில் 80% சீனாவசம் உள்ள நிலையில், இந்தியாவின் 6% இருப்பு மற்றும் இந்த புதிய நடவடிக்கை, இந்தியாவை ஒரு நம்பகமான மாற்று நாடாக மாற்றும் வாய்ப்பை உருவாக்குகிறது.
05:10 PM (IST) Oct 30
மழைக்காலங்களில் மளிகை சாமான்கள் புதியதாகவும், பாதுகாக்கவும் வைத்திருக்க சிம்பிளான சில வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
04:58 PM (IST) Oct 30
ராமதாஸ் தரப்பு பாமக நமது கட்சி இல்லை என்று அன்புமணி முதன்முறையாக அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொண்டர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
04:58 PM (IST) Oct 30
பிஎம் கிசான் 21வது தவணை நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகலாம், இதன் மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ரூ.2,000 கிடைக்கும். eKYC முடிக்காதவர்கள் அல்லது புதிதாக பதிவு செய்யாத விவசாயிகள் இந்த தவணையைப் பெற முடியாது.