இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

04:56 PM (IST) Nov 04
Rashmika Mandanna Constant Smile Reason : ஒருவர் ஏன் ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்துகொள்கிறார் என்பதற்கான காரணங்கள் அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதை புரிந்து கொள்ளாமல் அவர்களை விமர்சிப்பது தவறு. ராஷ்மிகாவின் இந்த மறுபக்கம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
10:17 PM (IST) Nov 03
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை 2025-ஐ வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, அணி வீராங்கனைகள் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர்.
10:16 PM (IST) Nov 03
Harmanpreet Recreates Dhoni’s 2011 WC Moment: இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், 2011 உலகக்கோப்பைக்கு பிறகு தோனி கொடுத்த போஸை ரீகிரியேட் செய்துள்ளார்.
10:09 PM (IST) Nov 03
இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் தொடங்கியுள்ளது. பாலிவுட் ஸ்டார் இயக்குனர் ஒருவர் மறைமுகமாக பிரபாஸ் மற்றும் சந்தீப் ரெட்டி வங்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
09:42 PM (IST) Nov 03
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டம், நன்கொடையாளர்கள் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. முதல்வர் இத்திட்டத்திற்கு பங்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
09:41 PM (IST) Nov 03
TMC Job Alert டாடா நினைவு மையத்தில் (TMC) 330 காலிப் பணியிடங்கள். 10வது, நர்சிங், டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நர்ஸ், உதவியாளர், கிளார்க் உட்பட பல பதவிகள். சம்பளம் ₹44,900 வரை. கடைசி நாள்: 14.11.2025.
09:39 PM (IST) Nov 03
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக மகளிரணியினர் தீப்பந்தம் கையில் ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என குற்றம்சாட்டினார்கள்.
09:36 PM (IST) Nov 03
Job Alert அணுசக்தித் துறையில் (NFC) 405 அப்ரெண்டிஸ் காலியிடங்கள். 10வது + ஐ.டி.ஐ படித்தவர்களுக்குத் தேர்வில்லாமல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு. சம்பளம் ₹10,560 வரை. விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15.11.2025.
09:28 PM (IST) Nov 03
TN Govt Job Alert தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் 1483 கிராம ஊராட்சி செயலாளர் வேலைகள். 10வது படித்தவர்கள் தகுதியானவர்கள். நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு. சம்பளம் ₹50,400 வரை. கடைசி நாள்: 09.11.2025.
09:22 PM (IST) Nov 03
Cyber Law Career சைபர் சட்டம் படித்து சைபர் ஆலோசகர், லீகல் அட்வைசர் போன்ற வேலைகளில் சேரலாம். 6 மாத டிப்ளமோ படிப்பின் விவரங்கள், கட்டணம், மற்றும் ₹10 லட்சம் வரையிலான சம்பளம் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
09:16 PM (IST) Nov 03
தெலங்கானா ரங்கா ரெட்டி மாவட்டத்தில், அரசுப் பேருந்தும் ஜல்லி கல் ஏற்றிய லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 24 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
09:15 PM (IST) Nov 03
AI Chatbot Addiction ChatGPT போன்ற AI சாட்பாட்களின் அதிகப்படியான பயன்பாடு மனநலப் பிரச்சினைகள், டிஜிட்டல் அடிமைத்தனம் மற்றும் 'AI உளப்பிணி' ஆகியவற்றை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மனிதப் பாசத்தை AI மாற்ற முடியாது.
09:08 PM (IST) Nov 03
AI in Gaming ₹190 பில்லியன் மதிப்பிலான கேமிங் துறையில் generative AI ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. கேம் உருவாக்குவது மலிவாகிறது. ஆனால், 30-40% படைப்பாற்றல் பணிகளில் வேலை இழப்பு ஏற்படுமோ என டெவலப்பர்கள் அஞ்சுகின்றனர்.
09:02 PM (IST) Nov 03
vivo Y19s 5G Vivo Y19s 5G இந்தியாவில் அறிமுகம்! Dimensity 6300 சிப், 6000mAh பேட்டரி மற்றும் IP64 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட இந்த 5G ஃபோனின் விலை ₹10,999.
08:41 PM (IST) Nov 03
Geyser Power Saver குளிர்காலத்தில் கீசர் பயன்பாட்டினால் மின் கட்டணம் உயர்வதைத் தவிர்க்க, 5-ஸ்டார் கீசரை பயன்படுத்துங்கள், வெப்பநிலையை 50-55°C-ல் வையுங்கள். மேலும், சர்வீஸ் மற்றும் ஆட்டோ-கட் அம்சத்தைப் பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்கலாம்.
08:19 PM (IST) Nov 03
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
08:15 PM (IST) Nov 03
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குருத்வாரா சென்றபோது, அவரது ஷூவைப் பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்பட்டதாக வெளியான உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பகவந்த் மானும் இந்த விமர்சனங்களைக் கிண்டல் செய்து நிராகரித்துள்ளார்.
07:34 PM (IST) Nov 03
பீகார் தேர்தல் பிரச்சாரத்தில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோரை 'மூன்று குரங்குகள்' என விமர்சித்தார். அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் எனவும் கடுமையாகச் சாடினார்.
07:31 PM (IST) Nov 03
Ilaiyaraaja Honors His Late Daughter Bhavatharini: இசைஞானி இளையராஜா தன்னுடைய மகள் கனவை நிறைவேற்றும் விதமாக ஆர்கெஸ்ட்ரா ஒன்றை துவங்கியுள்ள நிலையில், இதற்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
07:31 PM (IST) Nov 03
SIR எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் SIR-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.
06:47 PM (IST) Nov 03
மெகாஸ்டார் சிரஞ்சீவி சுயமாக திரையுலகில் நுழைந்து, ஹீரோவாக, ஸ்டார் ஹீரோவாக, மெகாஸ்டாராக உயர்ந்தார். ஆனால், அவர் வில்லனில் இருந்து ஹீரோவாக மாறியதற்கு அவரது தாய் அஞ்சனா தேவியின் பங்கு முக்கியமானது.
06:28 PM (IST) Nov 03
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 35 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
05:57 PM (IST) Nov 03
ரஜினிகாந்த் திரையுலகில் 5 தசாப்தங்களை நிறைவு செய்துள்ளார். தற்போது கமல்ஹாசனுடன் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கவிருப்பதாக பேச்சு நடந்து வருகிறது. இந்தப் படமே அவரது கடைசிப் படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
05:45 PM (IST) Nov 03
பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் மோடி தனது மகனின் திருமணம் போல பீகாரில் பிரசாரம் செய்வதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
05:44 PM (IST) Nov 03
Ethirneechal Thodarkirathu: திருச்செல்வம் இயக்கி வரும், 'எதிர்நீச்சல்' தொடர்கிறது சீரியலில் தேவகி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நடிகை யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
05:30 PM (IST) Nov 03
Today Rasi Palan : நவம்பர் 04, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:27 PM (IST) Nov 03
Today Rasi Palan : நவம்பர் 04, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:24 PM (IST) Nov 03
Today Rasi Palan : நவம்பர் 04, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:22 PM (IST) Nov 03
Today Rasi Palan : நவம்பர் 04, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:19 PM (IST) Nov 03
Today Rasi Palan : நவம்பர் 04, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:15 PM (IST) Nov 03
Today Rasi Palan: நவம்பர் 04, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:10 PM (IST) Nov 03
50 ஓவர் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு வைர நகைகள் பரிசளிக்க உள்ளதாக தொழில் அதிபர் கோவிந்த் தோலகியா அறிவித்துள்ளார்.
04:59 PM (IST) Nov 03
நாட்டில் 14 முதல் 18 வயது சிறார்களுக்கு சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நேபாளத்தில் இதேபோன்ற தடையால் ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களைச் சுட்டிக்காட்டி, இந்த மனுவை ஏற்க மறுத்துவிட்டது.
04:30 PM (IST) Nov 03
‘பணக்கார தந்தை, ஏழை தந்தை’ புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி, பங்குச் சந்தையில் ஒரு பெரிய வீழ்ச்சி வரக்கூடும் என்று எச்சரித்துள்ளார். இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் தெரியும் என்றும் எச்சரித்துள்ளார்.
04:12 PM (IST) Nov 03
Rajinikanth Congratulates Team India: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 52 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
04:06 PM (IST) Nov 03
இபிஎப்ஓ (EPFO) 'பாஸ்புக் லைட்' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, இது உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் தகவல்களை எளிதாகப் பார்க்க உதவுகிறது.
03:56 PM (IST) Nov 03
ஆப்கானிஸ்தானின் சமங்கன் மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 260 பேர் காயமடைந்துள்ளனர்.
03:46 PM (IST) Nov 03
Tamilnadu Weather Update: கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
03:37 PM (IST) Nov 03
Bigg Boss Sends Former Contestants: பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஏற்கனவே, போட்டியாளர்களாக இருந்தவர்கள் சிலரை தேர்வு செய்து பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.
03:35 PM (IST) Nov 03
பர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு EMI ஆகிய இரண்டும் நிதி உதவி அளித்தாலும், வட்டி, காலம், செயல்முறைகளில் வேறுபடுகின்றன.