ஆசிரியர்களுக்கு 'குட்' நியூஸ்..சொன்ன தமிழக அரசு..பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு !!

Published : Jan 21, 2022, 08:37 AM IST
ஆசிரியர்களுக்கு 'குட்' நியூஸ்..சொன்ன தமிழக அரசு..பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு !!

சுருக்கம்

தமிழகத்தில் நாளை ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகையான பள்ளிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,நாளை (22.01.2022) ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு 31.01.2022 வரை மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும்,பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,மாணவர்கள் இன்றி பள்ளிகள் செயல்படுவதால் நாளை (22.01.2022) சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது’ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!