பிப்ரவரி 10ஆம் தேதி ஒரே நாளில் பத்திரப் பதிவு மூலம் தமிழக அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கூடுதல் முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட்டதால், 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, டாஸ்மாக் வருவாயை மிஞ்சும் அளவுக்கு வசூல் கிடைத்துள்ளது.

09:23 PM (IST) Feb 11
07:35 PM (IST) Feb 11
சைபர் குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் தொடர்ந்து புதிய வழிகளில் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்தச் சூழலில், டிஜிட்டல் கைது தொடர்பான பல வழக்குகளும் வெளிச்சத்துக்கு வருகின்றன. டிஜிட்டல் கைது குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க: வாட்ஸ்அப் மூலம் எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி! செய்யவே கூடாத தவறு இதுதான்!
07:05 PM (IST) Feb 11
இயக்குநர் ஜே.எஸ்.கே. கூறும்போது, “உண்மையில் நடந்த சம்பவங்களைக் கொண்டு நான் எழுதிய கதை இந்தப் படம். நான்கு பெண்களைப் பற்றிய கதை.
07:04 PM (IST) Feb 11
இன்றைய சூழலில் பெண்கள் எதிர் கொள்ளும் அன்றாட நிகழ்வுகளை மையமாக வைத்து ஃபயர் உருவாகியிருக்கிறது. ஃபயர் பட பிரிவியூ ஷோ வில் சாக்ஷி அகர்வால் பேச்சு.
07:02 PM (IST) Feb 11
நடிகர் கஞ்சா கருப்பு, அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லை என கொந்தளிக்கும் வீடியோ ஊன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
05:50 PM (IST) Feb 11
பாடலாசிரியரும் - இயக்குனருமான பா விஜய் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள திகில் படமான, அகத்தியா படத்தின் ட்ரைலர் வெளியானது.
05:49 PM (IST) Feb 11
பரிதாபங்கள் வீடியோக்கள் மூலம் பிரபலமான கோபி மற்றும் சுதாகர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் வெளியானது.
05:26 PM (IST) Feb 11
Mamta Kulkarni Resigned from MahaMandaleshwar of Kinna Aghada : பாலிவுட் நடிகையிலிருந்து சாதுவாக மாறிய மம்தா குல்கர்னி, கின்னர் அகாடாவின் மகா மண்டலேஸ்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
04:50 PM (IST) Feb 11
கானா இசை மூலம், தமிழ் சினிமாவில் தனக்கான ஸ்டைலை உருவாக்கிக் கொண்ட இசையமைப்பாளர் தான் 'தேவா' இவர் பத்தே நிமிடத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு போட்ட ஹிட் பாடல் பற்றிய உங்களுக்கு தெரியுமா? வாங்க இந்த பதிவில் பார்க்கலாம்.
04:49 PM (IST) Feb 11
ஆரம்பத்தில் வெறும் ஐந்தாயிரம் சம்பளம் பெற்று வந்த நடிகை இப்போது ஒரு படத்திற்கு ஆறு கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். அந்த நாயகி யார் தெரியுமா?
04:10 PM (IST) Feb 11
மதுபானங்கள் விலை திடீரென உயர்த்தப்பட்ட சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீர் வகைகளின் விலையும் 15% உயர்த்தப்பட்டுள்ளது.
03:47 PM (IST) Feb 11
தமிழ்நாடு மின்சார வாரியம் நாளை பல்வேறு இடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்வெட்டு அறிவித்துள்ளது.
03:43 PM (IST) Feb 11
நடிகர் கார்த்தி தன்னுடைய மகன் கந்தன் மற்றும் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தபோது எடுத்த போட்டோஸ் வைரலாகிறது. மேலும் படிக்க
03:11 PM (IST) Feb 11
01:50 PM (IST) Feb 11
நேற்றைய தினம் 3 பிரபலங்கள் 'அண்ணா' சீரியலில் என்ட்ரி கொடுக்க, குழந்தைக்கு உடல் நலம் முடியாமல் போகிறது. இதை தொடர்ந்து இன்று என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.
01:27 PM (IST) Feb 11
01:26 PM (IST) Feb 11
பிப்ரவரி 10ஆம் தேதி ஒரே நாளில் பத்திரப் பதிவு மூலம் தமிழக அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கூடுதல் முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட்டதால், 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, டாஸ்மாக் வருவாயை மிஞ்சும் அளவுக்கு வசூல் கிடைத்துள்ளது.
12:58 PM (IST) Feb 11
தமிழ்நாடு மின்சார வாரியம் நாளை பல்வேறு இடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்வெட்டு அறிவித்துள்ளது.
12:51 PM (IST) Feb 11
பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் மூலம், மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் எடுத்துள்ள அதிரடி முடிவு, பல டாப் ஹீரோக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
12:49 PM (IST) Feb 11
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படம், தளபதி விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் மோத உள்ளதாக வெளியாக உள்ளதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
12:47 PM (IST) Feb 11
ஒவ்வொரு நாளும் யூகிக்க முடியாத கதைக்களத்துடன், சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
12:25 PM (IST) Feb 11
நயன்தாரா தான் தன் பட இசை வெளியீட்டு விழாக்களில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிடுவார். தற்போது அவரைப் போல் தனுஷும் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டாரா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் படிக்க.
11:50 AM (IST) Feb 11
விஜயின் தவெக கட்சி நிர்வாகிகளுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் 2ஆம் நாளாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
11:20 AM (IST) Feb 11
11:19 AM (IST) Feb 11
10:58 AM (IST) Feb 11
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ரயில்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை எழுப்ப ஒத்திவைப்பு நோட்டீஸை சமர்ப்பித்துள்ளார். பிப்ரவரி 6ம் தேதி கோவை-திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வாலிபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் கூச்சலிட்டதால் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கொடூரமான சம்பவத்தைத் தொடர்ந்து இதுகுறித்து விவாதிக்கப்பட உள்ளது.
10:52 AM (IST) Feb 11
மாநகர போக்குவரத்து கழகத்தில் 600 தாழ்தள மின்சார பேருந்துகள் கொள்முதல் , பயன்பாடு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள டெண்டர் கோரபட்டுள்ளது. மார்ச் 10ம் தேதி முதல் விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் இணையதளத்தில் டெண்டர் கோரலாம்.
10:47 AM (IST) Feb 11
தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்து விஜய் போட்டுள்ள பதிவில், “தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
10:47 AM (IST) Feb 11
இன்றும் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு தங்கத்தின் விலை 80 ரூபாய் அதிகரித்து 8060 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 64,480க்கு ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
10:29 AM (IST) Feb 11
பெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். பயிர் அறுவடைப் பரிசோதனைகள் முடிந்த பகுதிகளுக்கு பிப்ரவரி இறுதி வாரத்தில் இழப்பீடு வழங்கப்படும்.
09:13 AM (IST) Feb 11
கடந்த 3 ஆண்டுகளில் 255 பயணிகள் விமான நிறுவனங்களால் விமானப் பயண அனுமதி இல்லை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். தடைப் பட்டியலில் உள்ளவர்கள் 60 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
09:12 AM (IST) Feb 11
பிப்ரவரி மாத தொடக்கத்தில் ஒரு பெரிய செய்தி. ரூ.2000 நோட்டுகளுக்குப் பிறகு, ரூ.200 நோட்டுகள் ரத்து செய்யப்படுமா? சந்தையில் இருந்து அனைத்து ரூ.200 நோட்டுகளும் திரும்பப் பெறப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
09:11 AM (IST) Feb 11
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் வந்த பிரதமர் மோடியை, அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். அங்கு நடைபெறும் AI உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
08:58 AM (IST) Feb 11
தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுத் துறை முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது ஹால் டிக்கெட் வெளியீடும் தேதி வெளியாகியுள்ளது.