கூடலூர் அருகே ஆட்கொல்லி புலி T23 பிடிக்க வனத்துறையினர் 11வது நாளாக முயன்று வருகின்றனர்.
கூடலூர் அருகே ஆட்கொல்லி புலி T23 பிடிக்க வனத்துறையினர் 11வது நாளாக முயன்று வருகின்றனர்.
கூடலூர் மசினகுடி பகுதியில் புலி ஒன்று கால்நடைகளையும், மனிதர்களையும் வேட்டையாடி வருகிறது. 30க்கும் மேற்பட்ட கால்நடைகள், 4 மனிதர்கள் இந்த புலிக்கு இரையாகி உள்ளனர்.
மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த புலியானால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போயிருக்கிறது. மசினகுடி, சிங்காரா வனப்பகுதியில் கேரளா மற்றும் தமிழக வனத்துறையினர் இணைந்து ஆட்கொல்லி புலியை பிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனர்.
11வது நாளாக இன்றும் புலி வேட்டை தொடங்கி உள்ளது. கால்நடைகளை கூட்டமாக ஒரு இடத்துக்கு அனுப்பி அங்கு புலி வந்தால் பிடிக்கவும் உத்தி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் யானைகள் மீது பரண் அமைத்தும் புலி எங்கு இருக்கிறது என்று தேடப்பட்டு வருகிறது.
முயற்சிகள் தீவிரமாகி உள்ளதால் இன்று அல்லது நாளைக்கும் ஆட்கொல்லி புலி அகப்பட்டு விடும் என்றும், அதுவரை மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.