மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுரேஷ்கோபி தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனால் பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
கேரளாவில் கால் பதித்த பாஜக
இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தல் பாஜகவிற்கு பல மாநிலங்களில் அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதிக நம்பிக்கை வைத்திருந்த உத்தரபிரதேஷம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் காலை வாரிவிட்டது. அதே நேரத்தில் தென் மாநிலங்கள் பாஜகவிற்கு இந்த முறை கை கொடுத்தது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட அளவு இடங்களை கைப்பற்றியது.
இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல் முறையாக கேரளாவில் பாஜக கால் பதித்தது. நடிகர் சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்று பாஜகவினரை உற்சாகமடையசெய்தார். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கிய சுரேஷ் கோபி 74 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்,
மத்திய அமைச்சராக சுரேஷ் கோபி
இதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பிரதமராக மோடி நேற்று பதவியேற்றார். அப்போது 73 பேர் கொண்ட மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் என பதவியேற்றுக்கொண்டனர். இதில் குறிப்பிடும் படி கேரள மாநிலத்தில் பாஜகவை வெற்றி பெற செய்த சுரேஷ் கோபிக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவரும் பதவியேற்றுக்கொண்டார். இந்தநிலையில் தனக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வேண்டாம் என சுரேஷ்கோபி தெரிவித்துள்ளார். பல பல படங்களில் நடிப்பதற்கு ஏற்கனவே ஒப்புக்கொண்டதால் அமைச்சர் பதவியை தற்போது தொடரமுடியாது என கூறியுள்ளார். எனவே விரைவில் அமைச்சர் பதவியில் இருந்து தன்னை விடுவிப்பார்கள் என சுரேஷ்கோபி தெரிவித்துள்ளார்
போதை பொருள் வழக்கில் சிக்கிய 57 வயது பிரபல நடிகை.. நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடி நீக்கம்..