இன்று மொத்த இந்தியாவின் கூட்டாட்சித்தன்மையையும் பன்முகத்தன்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை நம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடியுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் வரலாறு படைப்போம்! நாட்டைக் காப்போம் என தெரிவித்துள்ளார்.
மாநில கட்சி ஆட்சி அமைத்த நாள்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், யார் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற கேள்வி அனைவருடைய மத்தியிலும் எழுந்துள்ளது. இந்தநிலையில் இந்தியத் தேர்தல் வரலாற்றில் மாநிலக் கட்சி முதன்முதலாக ஆட்சி அமைத்த நாள் மார்ச் 6 ஆம் தேதி, 1967-ம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது. இந்த நாளையொட்டு திமுக தலைவரும், முதலமைச்சர் ஸ்டாலினும் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
மார்ச் 6!
இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்!
பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்!
அன்று தமிழ்நாட்டைக் காத்தோம்! இன்று மொத்த… pic.twitter.com/Svhmb5K9Vf
அமைதிப்புரட்சியை நிகழ்த்திய நாள்
மார்ச் 6! இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்! பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்! அன்று தமிழ்நாட்டைக் காத்தோம்! இன்று மொத்த #INDIA-வின் கூட்டாட்சித்தன்மையையும் பன்முகத்தன்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை நம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடியுள்ளது. மீண்டும் வரலாறு படைப்போம்! நாட்டைக் காப்போம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டோ போட்டு போஸ்டர்.. கிண்டல் செய்த அதிமுக.!! பாஜக நிர்வாகிகள் அதிரடி நீக்கம்