மீண்டும் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது... இலங்கை கடற்படை அட்டூழியம்- நிரத்தர தீர்வு எப்போது.?

By Ajmal KhanFirst Published Mar 15, 2024, 8:32 AM IST
Highlights

இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தொடரும் மீனவர்கள் கைது

இந்திய எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிகழ்வு தொடர் கதையாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த மீனவர்கள் தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்ட நிலையில், இலங்கை அரசோடு முதல்கட்ட பேச்சுவார்த்தை மட்டும் நடைபெற்றது. அடுத்த அடுத்த நிகழ்வுகள் நடைபெறாமல் இருந்து வருகிறது. இந்தநிலையில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்து முதல் முறை கைது செய்யப்பட்டால் எச்சரித்து விடுவிக்கப்படுவதாகவும், இரண்டாவது முறை 6 மாத சிறை தண்டனையும், 3வது முறை ஒரு வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது

Latest Videos

15 நாகை மீனவர்கள் கைது

இதன் காரணமாக ஒரு சில தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று மீண்டும் 15 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே கவலையை உருவாக்கியுள்ளது.  இன்று அதிகாலை நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 15பேர் யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து எல்லை தாண்டி வந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை ஒப்படைத்துள்ளது.

இதையும் படியுங்கள்

சென்னையில் 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்.. அலறிய பொதுமக்கள்.. சாலையில் தஞ்சம்?

click me!