சென்னை மசாஜ் செண்டரில் பாலியல் நடத்தி வந்த கேரளாவை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையின் பல்வேறு இடங்களில் மசாஜ் செண்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கிடைக்கப்பெறும் தகவல்களின் பேரில் அவ்வப்போது போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை புறநகர் பகுதியான பெருங்குடியில் மசாஜ் செண்டரில் விபச்சாரம் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குறிப்பாக வெளிமாநில பெண்களை அழைத்து வந்து ஒரு கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் பெருங்குடி கோதண்டராமன் நகர், பிரதான சாலையில் உள்ள மசாஜ் செண்டரில் பாலியல் தொழில் நடந்து வருவதை போலீசார் கண்டுபிடித்தனர்.
மேலும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த கேரளாவை சேர்ந்த பிரதீஷ் என்ற 36 வயதான நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த தாமஸ் என்ற நபரையும் போலீசார் தேடி வருகின்றனர். அந்த மசாஜ் செண்டரில் இருந்த பெண்களை மீட்ட போலீசார், அவர்களை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.