நீங்க யாரும் சாதியை பார்த்து ஓட்டு போடாதீங்க... விரைவில் அந்த காலம் வரும்.. சீமான்..!

By manimegalai a  |  First Published Oct 2, 2021, 8:58 PM IST

தமிழர் என்று நினைத்து ஓட்டு போடுங்க, சாதி பார்த்து ஓட்டு போடாதீங்க என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


நெல்லை: தமிழர் என்று நினைத்து ஓட்டு போடுங்க, சாதி பார்த்து ஓட்டு போடாதீங்க என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. உள்ளாட்சி தேர்தல் களத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லை மாவட்டத்தில் பிரச்சாரத்தில் இறங்கினார்.

நாங்குநேரி, ராதாபுரம் தொகுதியில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் சீமான் பேசியதாவது:

நீங்க யாரும் சாதியை பார்த்து ஓட்டு போட வேண்டாம். தமிழர் என்று நினைத்தால் வாக்களியுங்கள். தமிழகனுக்கு அடையாளம், பெருமை இருக்கக்கூடாது என்று திராவிட கட்சிகள் நினைக்கின்றன.

தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 7 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கிறோம். ஒற்றுமையாக இருந்தால் 10 சதவீதத்தை பிடித்திருக்கலாம். விரைவில் அந்த காலம் வரும் என்று பேசினார்.

click me!