சவுக்கு சங்கர் மீது கடந்த மே மாதம் 12-ம் தேதி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண் காவலர்களை இழிவாக பேசியதாக கடந்த மே மாதம் 4ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதேபோல திருச்சி, சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் காவல் துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: நிவாரணம் கொடுத்துட்டா மட்டும் கடமை முடிஞ்சது நினைக்காதீங்க! இந்த விபத்துக்கு திமுக தான் காரணம்! டிடிவி.தினகரன்
அவர் மீது சிஎம்டிஏ அதிகாரி அளித்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, அந்த வழக்கிலும் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் மீது கடந்த மே மாதம் 12-ம் தேதி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் முழுவதும் ஜெயில்! சொத்து பறிமுதல்! எத்தனை லட்சம் அபராதம் தெரியுமா?
இந்நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் தொடர்பாக சென்னையில் உள்ள அறிவுரைக் கழகம் விசாரணை நடத்திய நிலையில் அவர் மீதான குண்டர் சட்டத்தை உறுதிப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுக்கு சங்கரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதால் குண்டர் சட்டத்தில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.