அடுத்தடுத்து லீக் ஆகும் வினாத்தாள்... மார்க் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது... பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!

Published : Feb 15, 2022, 04:31 PM IST
அடுத்தடுத்து லீக் ஆகும் வினாத்தாள்... மார்க் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது... பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!

சுருக்கம்

திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு களுக்கு ஏப்ரல் இறுதி அல்லது முதல் வாரத்தில் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.  இதற்காக மாணவர்களை தயார் படுத்தும் நோக்கில் தற்போது திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது.  கடந்த 9ம் தேதி காலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் மதியம் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் திருப்புதல் தேர்வு தொடங்கியது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்படாமல் மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால்,  பொதுத் தேர்வு நடத்துவதற்கு அரசு தேர்வுத்துறை தயாராகி உள்ளது. அதன் அடிப்படையிலேயே திருப்புதல் தேர்வு  நடத்தப்பட்டு வருகிறது.  இதனால் பொது தேர்வில் கடைபிடிக்கப்படும் அனைத்து நடைமுறைகளும் திருப்புதல் தேர்வு கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தியது. இதனிடையே திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் தொடர்ந்து கசிந்த வண்ணம் இருப்பதால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை  வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது, மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த மாதமும் ஒரு திருப்புதல் தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்பட இருக்கிறது. 3 மணி நேரம் மாணவர்கள் தேர்வு எழுத பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.  எனவே பெற்றோர்களும், மாணவர்களும் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!