விருதுநகரில் பருப்பு நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி
வருகின்றனர்.
விருதுநகரில் பருப்பு நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி
வருகின்றனர்.
விருதுநகரில் இந்துமதி ரீபைனரி பருப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பருப்பு மற்றும் எண்ணெய் வகைகள்
விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
undefined
இந்த நிலையில், இந்துமத நிறுவனம் சார்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத் ஸ்டேட் வங்கிகளிடம் இருந்து முறைகேடாக கடன்
பெற்றதாக கூறப்படுகிறது.
போலி ஆவணங்கள் மூலம் ரூ.87.36 கோடி கடன் பெற்றுள்ளது இந்துமதி ரீபைனரி நிறுவனம். இது தொடர்பாக புகார் வந்த நிலையில்,
அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்துமதி ரீபைனரி நிறுவனத்தின் 4 இயக்குநர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை,
விருதுநகர், கோவை, மதுரை, தேனி ஆகிய பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வங்கிகளில் முறைகேடாக கடன் பெற்றது எப்படி? அதற்கு துணையாக இருந்த அதிகாரிகள் யார் யார்? வங்கிகளிடம் பெற்ற பணம் எங்கு
பதுக்கி வைத்துள்ளனர்? அல்லது சொத்துக்கள் ஏதும் வாங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வெளிநாடுகளில் இருந்து பருப்பு, எண்ணெய் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து
வருகின்றனர்.