திருச்சி காவல் நிலையத்தில் இரவு நேர பணியின் போது பெண் காவலருக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் வீடியோ தற்போது வெளியாகி தீயாய் பரவி வருகிறது.
திருச்சி காவல் நிலையத்தில் இரவு நேர பணியின் போதுபெண் காவலருக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் வீடியோ தற்போது வெளியாகி தீயாய் பரவி வருகிறது .
திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக இருந்தவர் பாலகிருஷ்ணன். இவருக்கு வயது 54 இவர் கடந்த 12ம் தேதி இரவு பணி பார்த்தபொழுது, ஸ்டேஷனில் இரவுப் பணியில் இருந்த முதல்நிலை காவலர் சசிகலா என்பவருக்கு முத்தம் கொடுத்துள்ளார்.. அப்போது அங்கு ஏதேச்சையாக வந்த தனிப்பிரிவு ஏட்டு கேசவனிடம் சசிகலா புகார் தெரிவித்து உள்ளார். பின்னர் இந்த புகாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் தன் மீது மட்டும் ஏன் இந்த நடவடிக்கை அந்த பெண் போலீஸ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டார். பின்னர் சிசிடிவி கேமராவை சோதனை செய்த பின்னர், இருவரும் பரிமாறிக்கொண்ட முத்தக்காட்சி கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த காட்சியில் பெண் போலீசார் பாலியல் சீண்டலுக்கு ஆளான போது,எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லையே என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.