கோவை விமானநிலையத்தில் இருந்து தினமும் காலை 6.45 மணியளவில் மும்பைக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் நேற்று காலை பயணிகளுடன் வழக்கம் போல் புறப்பட்டது.
கோவையில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்த இண்டிக்கோ விமானத்தில் பயணித்த ஆடிட்டர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை விமானநிலையத்தில் இருந்து தினமும் காலை 6.45 மணியளவில் மும்பைக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் நேற்று காலை பயணிகளுடன் வழக்கம் போல் புறப்பட்டது. இந்த விமானத்தில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆடிட்டர் லோகநாதன்(51) என்ற பயணியும் இருந்தார். விமானம் காலை 6.45 மணிக்கு புறப்பட்ட தயாராகி ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது லோகநாதனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
வலியால் துடித்துக் கொண்டிருந்த அவரை சக பயணிகள் பார்த்து அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டனர். இதனையடுத்து, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகளுக்கும் மருத்துவ குழுவுக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர், லோகநாதனை விமானத்தில் இருந்து கீழே இறக்கி விமான நிலைய ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, சுமார் ஒரு நேரம் கழித்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இண்டிகோ விமானம் வழக்கம் போல புறப்பட்டது.