கடலூர் மாவட்டத்தில் பரோட்டா சாப்பிட்டு தூங்கியவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பரோட்டா சாப்பிட்டு தூங்கியவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் இருந்து சிதம்பரம் வரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுகிறது. இந்த பணியில் உத்தரப்பிரதேச மாநிலத்தை பல தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவர்களில் ஒருவரான கைலாஷ் என்பவர் சொந்த ஊர் சென்றுவிட்டு நேற்று சிதம்பரம் திரும்பி இருக்கிறார்.
சிதம்பரம் அடுத்துள்ள பெரியகுமட்டி என்ற கிராமத்தில் வழக்கமான தங்குமிடத்துக்கு வந்துள்ளார். இரவு உணவாக பரோட்டாவை சாப்பிட்டு படுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட அங்கிருந்தவர்கள் கைலாஷை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கைலாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக பரோட்டா சாப்பிட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதாக செய்திகள் வெளியான தருணத்தில் மீண்டும் ஒரு பரோட்டா மரணமா என்று மக்கள் பீதியில் உள்ளனர். ஓட்டல் உரிமையாளர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.