Village Food Factory முகநூல் பக்கத்தில் தொடர்ந்து ஆபாச படங்கள் பகிரப்பட்டு வந்த நிலையில் குழுவினர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
டாடி ஆறுமகத்தின் யூ டியூப் சமையல் சேனலை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. தனது எதார்த்த பேச்சு மற்றும் சமையல் மூலம் தனது யூ டியூப் சேனலுக்கு என ஒரு பெரும் கூட்டத்தை ஆறுமுகம் உருவாக்கி உள்ளார். இவரின் Village Food Factory யூ டியூப் சேனலுக்கு சுமார் 4.75 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.
இன்று டாடி ஆறுமுகம் என்றால் தமிழகத்தில் தெரியாதவர்களே இருக்க முடியாது என்று கூட சொல்லலாம். தேனி மாவட்டத்தை சேர்ந்த இவர் தனது மகனின் ஆலோசனையின் பேரில் இந்த யூ டியூப் சேனலை தொடங்கி உள்ளார். இந்த சேனல்லு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானார். ராகுல்காந்தி ஒருமுறை தமிழ்நாடு வந்திருந்த போது கூட இந்த யூ டியூப் சேனல் குழுவினரை சந்தித்து பேசினார். இதே போல் வெளிநாடுகளை சேர்ந்த உணவு பிரியர்களும் டாடி ஆறுமுகம் மற்றும் குழுவினரை சந்தித்து பேசி அவர்கள் சமைக்கும் உணவை சுவைக்கின்றனர்.
போதைப்பொருள் கடத்தல்.. ஆதார் மோசடி.. தப்பிய சென்னை பெண்.. என்ன நடந்தது? மக்களே உஷார்.!
டிஜிட்டல் வெற்றியை தொடர்ந்து தற்போது டாடி ஆறுமுகம் மதுரை, புதுச்சேரியில் ஹோட்டல் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். Village Food Factory சேனலின் பேஸ்புக் பக்கத்தை 53 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் இந்த முகநூல் பக்கத்தில் தொடர்ந்து ஆபாச படங்கள் பகிரப்பட்டு வந்ததால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சூழலில் Village Food Factory குழுவினர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து தங்கள் பேஸ்புக் பக்கத்தில் அவர்கள் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில் “யாரோ தெரியாத நபர்களால் கணக்கில் அருவருக்க தக்க புகைப்படங்கள் பதிவிடப்படுகின்றன.எத்தனை முறை அழித்தாலும் மீண்டும் மீண்டும் ஸ்டோரி ஆக பதிவிடப்படுகின்றது. facebook நிறுவனத்திடம் சம்பந்தமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொறுமை காக்கவும் நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளனர்.