நவ.1ல் பள்ளிகள் திறப்பு இல்லையா…? ‘யு டர்ன்’ அடிக்கும் தமிழக அரசு…?

By manimegalai a  |  First Published Oct 6, 2021, 8:29 PM IST

தமிழகத்தில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பில் மாற்றம் வரும் என்று கூறப்படுகிறது.


சென்னை: தமிழகத்தில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பில் மாற்றம் வரும் என்று கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் திறப்பதில் தொடர்ந்து தாமதம் நிலவி வந்தது. கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டாலும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை.

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அதன்படி பள்ளிகளும் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சில பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

நிலைமைகள் இப்படி இருக்க வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டது. பல தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இது குறித்து பள்ளி மூலமாக அறிவிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.

பள்ளி மாணவர்கள் கட்ட வேண்டிய பீஸ், சீருடை, புத்தகங்கள், அடையாள அட்டைக்கான போட்டோ அனுப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகங்கள் தொடங்கி உள்ளது. மேலும் ஒரு பெஞ்சுக்கு ஒரு மாணவர் தான் அமர்வார் என்று ஆசிரியர்கள் மூலம் பெற்றோர்களுக்கு தகவல்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ஆனாலும் கொரோனா தடுப்பூசி போடாத 1ம் வகுப்பு முதல் இருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளை எப்படி பள்ளிக்கு அனுப்புவது என்ற தயக்கமும், சந்தேகமும் பெற்றோர்களிடம் இருப்பதை பள்ளி நிர்வாகங்கள் உணர்ந்திருக்கின்றன.

தடுப்பூசி போட்ட பெற்றோர்கள், ஆசிரியர்களும் இருக்கும் நிலையில் தடுப்பூசி போடாத குழந்தைகள் பள்ளிகளுக்கு அனுப்பத்தான் வேண்டுமா என்று கேள்வி வெகுவாக எழ ஆரம்பித்துள்ளது.

இந் நிலையில் வரும் நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் 12ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அரசு தேர்வுகள் துறை உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதன்பின்னரே நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா, இல்லையா என்று தெரியவரும்.

இப்போதுள்ள சூழ்நிலைகளை அளவுகோலாக வைத்து பார்க்கும் போது 1ம்வ  வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் என்பதை தள்ளி போடலாம், அரசு அவசரப்பட வேண்டாம் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது…!

click me!