DMK Slams AIADMK : தேர்தல் பத்திரம் மூலமாக லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் ஒன்று திமுகவிற்கு சுமார் 509 கோடி நன்கொடை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து தேர்தல் பத்திர விவகாரத்தில், திமுகவை கடுமையாக சாடி வந்த அதிமுகவிற்கு பதில் அளிக்கும் வகையில், தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளதாகவும், நன்கொடைக்கு ஈடாக மு.க.ஸ்டாலின் அரசு எந்த சலுகையும் அவர்களுக்கு வழங்கவில்லை என்றும் திமுகவின் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
"ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ்" என்ற நிறுவனத்தின் மூலம் தேர்தல் பத்திரங்கள் வழியாக திமுகவுக்கு 509 கோடி வழங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அந்த ஃபியூச்சர் கேமிங்கின் உரிமையாளர் தான் சாண்டியாகோ மார்ட்டின், "லாட்டரி கிங்" என்றும் இவர் அழைக்கப்படுகிறார். தற்போது இவர் அமலாக்க இயக்குநரகத்தின் கண்காணிப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கொடி, சின்னம் தொடர்பான வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
தேர்தல் ஆணையத்தின் இந்த தகவல் வெளியான உடனேயே, திமுகவின் போட்டியாளரான, அதிமுக கடும் விமர்சனங்களை முன்வைக்க துவங்கியது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆன்லைன் கேமிங்கிற்கு எதிரான திமுக அரசின் சட்டத்தை மேற்கோள்காட்டி சாடினார். "ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்கின்றோம் என்று கூறி, அந்த நிறுவனத்திடமே பணம் பெற்றுள்ளது திமுக" என்று பழனிசாமி கூறினார்.
இந்த நிலையில் அக்குற்றச்சாட்டை மறுத்த திமுக எம்பி டிஆர் பாலு, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் அரசு ஆன்லைன் கேமிங்கிற்கு எதிரான சட்டத்தை இயற்றியுள்ளது என்றும், கேமிங் நிறுவனத்திற்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என்றும் கூறினார். "மேலும் அந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவதை தாமதப்படுத்தியவர் கவர்னர், அதை அரசாங்கம் மீண்டும் அமல்படுத்தியது. ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் உரிமையாளர்களை சந்தித்தது ஆளுநர் தான்" என்று அவர் மேலும் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், "அமுலாக்க இயக்குனரகத்தால் மிரட்டப்பட்ட 30 நிறுவனங்களில், 14 நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு பெரும் தொகையை நன்கொடையாக அளித்துள்ளன. அதைக் கண்டிக்க இபிஎஸ்-க்கு முதுகெலும்பு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாலு. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டது பெரிய அளவில் அரசியல் சலசலப்பைக் கிளப்பியுள்ளது.
பொன்முடிக்கு ஆளுநர் மீண்டும் பதவி பிரமாணம் செய்தால் நீதிமன்றம் செல்வோம்: அதிமுக!