திருப்பி அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா... மீண்டும் ஆளுநரிடம் சமர்ப்பிப்பு!!

Published : Feb 08, 2022, 10:43 PM IST
திருப்பி அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா... மீண்டும் ஆளுநரிடம் சமர்ப்பிப்பு!!

சுருக்கம்

சட்டமன்றத்தில் மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டது. 

சட்டமன்றத்தில் மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டது. தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவை சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றியது. ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு 86,342 கருத்துகளை பரிசீலித்து 164 பக்கங்களில் தமிழக அரசுக்கு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் அத்தகைய தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களுக்கு செப்டம்பர் 13 அன்றே கிடைக்கப்பெற்ற இத்தீர்மானத்தை ஐந்து மாதங்கள் வேண்டுமென்றே கிடப்பில் போட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக உப்பு சப்பில்லாத காரணங்களை கூறி மீண்டும் தமிழக சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பினார். மேலும், நீட் விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவானது, கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானதாக இருப்பதாகவும், கிறித்தவ மருத்துவக் கல்லூரி வழக்கில் நீட் தேர்வை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், சமூகநீதியைப் பாதுகாப்பதாகவும், ஏழை மாணவர்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதாகவும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநரில் இந்த செயல் நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க கோரும் சட்ட முன்வரைவு தமிழ்நாடு சட்டப்பேரவையில், எந்த திருத்தமும் இன்றி, இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத்தில் மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா ஆளுநர் மாளிகையில் மாலை 5.30 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!