ஆசிட் வீச்சால் பாதிப்பு...தோல் தானத்திற்காக விழிப்புணவுர்வை ஏற்படுத்திய சவுத் இந்தியா அழகிப்போட்டி வெற்றியாளர்

By Ajmal Khan  |  First Published Jan 26, 2024, 10:43 AM IST

ஆசிட் வீச்சால் கடந்த 5 ஆண்டுகளில் 1800க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு உதவிடும் வகையில், மிஸ் அண்ட் மிஸஸ் கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா அழகி போட்டியில் வெற்றி பெற்ற அழகிகள் தோல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


தோல் தானம் விழிப்புணர்வு

கண்தானம், ரத்ததானம், உடல்உறுப்பு தானம் போல தோல் தானமும் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீட்டு தருவதில், மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் தோல் தானத்தை வலியுறுத்தும் வகையில் விழுப்புணர்வு ஏற்படுத்தப்படும் என  மிஸ் அண்ட் மிஸஸ் கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா அழகி போட்டியில் வெற்றி பெற்ற அழகிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.  கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா 2024 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்ததாக தெரிவித்தனர். 

Tap to resize

Latest Videos

சவுத் இந்தியா அழகி போட்டி வெற்றியாளர்கள்

இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் எமி ஜாக்சன் மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கிரீடம் அணிவித்தனர். இவர்களுடன் இயக்குனர் ஏ எல் விஜய் கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா போட்டியின் பிராண்ட் அம்பாசிடர் பார்வதி நாயர் ஆகியோரும் தலைமை விருந்தினர்களாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறினர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்த போட்டியில் பங்கு பெற பதிவு செய்திருந்த நிலையில், 51 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். 

ஆசிட் வீச்சு-தோல் தானம்

அழகு கலை, ஒய்யார நடை, மற்றும் கேள்வி பதில் சுற்றுகளில் பங்கேற்ற இவர்களில் அமால் ஷாஜகான் மிஸ் கோல்டன் பேஸ் ஆப் தமிழ்நாடு பட்டத்தை தட்டிச் சென்றார். ஜாக்லின் சோபியா மிஸஸ் கோல்டன் பேஸ் ஆப் தமிழ்நாடு பட்டத்தை வென்றார். நிவேதா அருண்பிரசாத் மிஸஸ் கோல்டன் ஃபேஸ் ஆப் சென்னை பட்டத்தையும், மேகா ராஜீவ் மிஸஸ் கோல்டன் ஃபேஸ் ஆப் சவுத் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தையும், வர்ஷினி வெங்கட், மிஸ் கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா போட்டியில் மூன்றாவது இடத்தையும் தக்க வைத்தனர். வெற்றி பெற்ற இவர்கள் அனைவரும் இணைந்து ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதையும் படியுங்கள்

உலகின் மிக விலை உயர்ந்த விஸ்கி இதுதான்: இந்த விலைக்கு சொகுசு பங்களாவே வாங்கிடலாம்!

click me!