தெருக்கள், சாலைகளுக்கு பெயர் மாற்றுவதில் குளறுபடி..! அலறிதுடித்து புது உத்தரவு போட்ட தமிழக அரசு

By Ajmal Khan  |  First Published May 31, 2022, 8:06 AM IST

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தமிழக அரசின் அனுமதி பெற்ற பின்னரே சாலைகள், கட்டடங்கள்,  பேருந்து நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 


பெயர் மாற்றுவதில் குளறுபடி

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள தெருக்கள் மற்றும் சாதிகளின் பெயர்களை மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இது போன்று தமிழகத்தில் பல்வேறு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும் பல்வேறு கட்டிடம் சாலைகள், கட்டடங்கள்,  பேருந்து நிலையங்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு புதிய பெயர்கள் சூட்டப்பட்டு வந்தது. இதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு பிடிக்காத தலைவர்களின் பெயர்களை மாற்றும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து உள்ளூரில் சில பிரச்சனைகள் எழுந்தது. இது தொடர்பான புகார் தமிழக அரசிற்கு வந்த்தையடுத்து தமிழக அரசு தற்போது புது உத்தரவை ஒன்றை பிறப்பித்துள்ளது.

Tap to resize

Latest Videos

லைவாணர் பெயரிலேயே கட்டிடம்

இது தொடர்பாக தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை,அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகர்கோவில் மாநகராட்சியில் பாலமோர் பகுதியில் உள்ள பழமையான கட்டடம் இடிக்கப்பட்டு தற்போது நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கான கட்டடம் புதியதாக கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடத்திற்கு பெயரிடுவதில் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன. இக்கட்டடம் ஏற்கனவே இருந்தவாறே. கலைவாணர் அவர்களின் பெயரிலேயே அழைக்கப்படும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.  தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டம் 1920-6UT பிரிவு 189 மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் 1981-ன் பிரிவு 266 (மற்ற மாநகராட்சிகளுக்கும் பொருந்த கூடியது) முதலானவற்றில் அரசின் அனுமதி பெற்ற பின்னரே மன்றங்கள் மற்றும் மாமன்றங்கள் அனைத்து நகராட்சி சொத்துக்களுக்கு பெயரிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அரசின் அனுமதி கட்டாயம் 

ஆனால், மேற்குறிப்பிட்ட சட்டவிதிகளை பின்பற்றாமல் அரசின் ஒப்புதலின்றி நகராட்சி சொத்துக்களுக்கு பெயர் வைப்பதற்கான முன்மொழிவுகளை மன்றத்தில் வைத்து தீர்மானங்கள் இயற்றப்படுவதாக அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மேற்குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளுக்குட்பட்டு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு சொந்தமான சாலைகள், தெருக்கள் பேருந்து நிலையங்கள் கட்டடங்கள், பூங்கா விளையாடுமிடங்கள் முதலியவற்றிற்கு பெயர் வைப்பது அல்லது பெயர் மாற்றுவது தொடர்பான முன்மொழிவுகள் நகராட்சி நிர்வாக இயக்குநர் ! பேரூராட்சிகளின் ஆணையாளர் வழியாக அரசிற்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் அரசின் அனுமதி பெற்ற பின்னரே பெயரிடுவது மற்றும் பெயர் மாற்றம் குறித்த தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட மாமன்றங்களின் ஒப்புதலுக்கு வைக்கப்படுதல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
 

click me!