AIADMK Report Against Annamalai : வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகின்றார். நேற்று மார்ச் 27ம் தேதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நேற்று மார்ச் 27 ஆம் தேதி கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளரான அண்ணாமலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அது குறித்த ஒரு சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. தேர்தல் விதிகளுக்கு புறம்பாக, Non Judicial முத்திரைத்தாளுக்கு பதிலாக, நீதிமன்ற முத்திரைத்தாளில் அண்ணாமலை பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆகவே அவர் தேர்தல் விதிகளை மீறி இருப்பதாகவும், இவருடைய வேட்பு மனுவை எப்படி ஏற்றார்கள் என்பது குறித்தும் தற்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது. கோவை நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை, திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அவர்களும், அதிமுக சார்பாக சிங்கை ராமச்சந்திரன் அவர்களும், பாஜக சார்பாக அண்ணாமலை அவர்களும் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
undefined
5 வருசமா உங்கள பாக்கவே இல்லையே; கரூரில் ஜோதிமணியை அலரவிட்ட பொதுமக்கள்
ஆனால் இந்த சூழலில் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக Indian Non Judicial பத்திரம் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்யாமல், ஆனால் அண்ணாமலை, Indian court fee பத்திரத்தில் மனுதாக்கல் செய்து இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் மற்றும் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தாக்கல் செய்த வேட்பு மனுவில் நீதிமன்றத்துக்கு வழக்கு பயன்படுத்தக்கூடிய ஸ்டாம்ப் பேப்பர் பயன்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்றும், அவரது வேட்புமனுவை ஏற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
அறிமுக கூட்டத்திலேயே அதிரடி.. அண்ணாமலை ஸ்டைலில் கெத்து காட்டிய திலகபாமா!