மக்களவை தேர்தல்.. 40 தொகுதியில் தேமுதிக தனித்து போட்டியா? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்.!

By vinoth kumar  |  First Published Mar 17, 2024, 3:50 PM IST

பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 21.03.2024 வியாழக்கிழமை அன்று காலை 10 மணியளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக  அதிமுக - தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளததாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தேமுதிக எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்பது இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் தேமுதிக விருப்ப மனு தாக்கல் செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Latest Videos

இதையும் படிங்க: கல்வியைக் காவிமயமாக்க முதல்வர் ஸ்டாலின் எப்படி துணைபோகிறார்? இதுதான் பாசிச எதிர்ப்பா? சீமான் ஆவேசம்!

இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பதினெட்டாவது 2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பாராளுமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை 19.03.2024 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11.00 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 20.03.2024 புதன்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இதையும் படிங்க:  வெறும் 30யே நாட்களில் தமிழகத்தில் தேர்தல்... மதில் மேல் பூனையாக பாமக, தேமுதிக- தவிக்கும் அதிமுக

பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர். மேலும், பாராளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 21.03.2024 வியாழக்கிழமை அன்று காலை 10 மணியளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என தெதரிவிக்கப்பட்டுள்ளது.

click me!