Tamilnadu Election Campaign : தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது..

By Raghupati R  |  First Published Apr 17, 2024, 6:32 PM IST

மக்களவைத் தேர்தல் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவடைந்தது.


தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வடைந்தது. இதனை மீறி பரப்புரை செய்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்கள், குறுஞ்செய்தி வாயிலாகவும் பரப்புரை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது, திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாகப் பிரச்சாரம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

மேலும் விதிமுறைகளை மீறினால் இரண்டு ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர் கட்சி, சுயேச்சை என பலரும் பொதுமக்களை சந்தித்து வாக்கு வேட்டையாடினர். இந்த நிலையில் இன்று மாலை 6 மணியோடு தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது.

Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..

click me!