நவ.15 வரை ஊரடங்கு நீட்டிப்பு… தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி..!

By manimegalai a  |  First Published Oct 23, 2021, 8:14 PM IST

நவம்பர் 15ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.


சென்னை: நவம்பர் 15ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்து வரும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நவம்பர் 15ம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதோடு கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அதன் விவரம் வருமாறு:

பண்டிகை காலம் என்பதால் அனைத்து வகை கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணி வரை செயல்படும் என்ற நேரக்கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது.

நவம்பர் 1ம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்கலாம். தனித்து இயங்கும் மதுபார்களுக்கு அனுமதி தரப்பட்டு உள்ளது.

அனைத்து பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தலாம். அரங்குகளில் அனைத்து கலாச்சார நிகழ்ச்சிகளையும் நடத்தி கொள்ளலாம்.

விளையாட்டு அரங்குகளில் பயிற்சி போட்டிகள், விளையாட்டு போட்டிகளை நடத்தி கொள்ளலாம். நீச்சல் குளங்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

நவம்பர் 1 முதல் கேரளா தவிர மற்ற மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையே ஏசி பேருந்து போக்குவரத்து 100 சதவீதம் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க அனுமதி தரப்பட்டு உள்ளது.

தேவையான அளவு ஊழியர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளையும் கொரோனா கால வழிகாட்டு முறைகளை பின்பற்றி நடத்தி கொள்ளலாம்.

click me!