School Holiday: இன்று பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்.. என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Apr 5, 2024, 7:09 AM IST

செம்மங்குளம் பகுதிக்கு வந்த சிறுத்தை அங்கு வாய்க்காலில் சுற்றி திரிந்த பன்றியை கடித்ததால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


சிறுத்தை நடமாட்டம் எதிரொலியாக மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே ஏப்ரல் 2ம் தேதி இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் வனத்துறையினரிடம் சிறுத்தையின் கால் தடம் உள்ளதை  பொதுமக்கள் காண்பித்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது நாய்கள் சிறுத்தையை விரட்டி சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது.

Latest Videos

இதையும் படிங்க: Public Holiday: தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி பொதுவிடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!

மேலும் செம்மங்குளம் பகுதிக்கு வந்த சிறுத்தை அங்கு வாய்க்காலில் சுற்றி திரிந்த பன்றியை கடித்ததால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர். சிறுத்தையை பார்த்தால் உடனே 9626709017 என்ற எண்ணுக்கு மக்கள் தகவல் தெரிவிக்கவும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர். தொடர்ந்து போலீசார், வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் 10 குழுக்களாக பிரிந்து சிறுத்தையை பிடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதையும் படிங்க:  கொளுத்தும் வெயிக்கு இடையே வரும் கோடை மழை.. குட்நியூஸ் சொன்ன கையோடு அலர்ட் கொடுக்கும் வானிலை மையம்!

இந்த சூழலில் சிறுத்தை நடமாட்டத்தால் மாணவர்களின் நலன் கருதி மயிலாடுதுறையில் உள்ள 7 பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனாலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு போலீஸ், வனத்துறையினர் பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்நிலையில், மயிலாடுதுறை, ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதால் இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் சிறுத்தை பிடிக்கப்படும் என்பதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

click me!