5 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்! நள்ளிரவு 1 மணி வரை வெளுத்து வாங்கப் போகுது!

By SG Balan  |  First Published Jul 4, 2024, 7:21 PM IST

தமிழகத்தில் இன்று இரவு 1 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களிலும் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்கிறது. மாலைக்குப் பின் வரும் இந்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், இன்றும் இரவு நேரத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணிதுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் இன்று இரவு 1 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இரவு 8.30 மணிக்குள் 11 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கரூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!