Thol Thirumavalavan : மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பல்வேறு கட்சியினரும் தங்களுடன் இணைந்து போட்டியிடும் தங்கள் கூட்டணி கட்சிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்திலும் தேர்தல் களமானது சூடுபிடிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகளை அரசியல் கட்சிகள் தீவிர்படுத்தியுள்ளன. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு தலா ஒரு தொகுதி ஒதுக்க தற்பொழுது உடன்பாடு ஏற்பட்டுள்ளது அனைவரும் அறிந்தது. இந்த சூழ்நிலையில் திமுக மற்றும் தொல் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியிடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்தது.
தொடர்ந்து பொய் பேசும் நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கே தகுதியற்றவர் - நாராயணசாமி காட்டம்
ஆனால் இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டும், திமுக கட்சியினரை சந்திக்க விசிக கட்சி நிர்வாகிகள் யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது. தங்கள் கட்சிக்கு இரண்டு தனி தொகுதி மற்றும் ஒரு பொதுத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவை, விசிக கட்சி வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் விசிக கட்சி அலுவலகத்தில் முன்னணி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த தோல் திருமாவளவன் அவர்கள், திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு தற்போது அதிமுக சைகை காட்டி வருவதாகவும், இது அதிமுகவுக்கு யாரோ கொடுத்த அஜெண்டா என்றும் கூறியுள்ளார்.
பாஜகவினுடைய கூட்டணியில் இருந்த அதிமுக போன்ற பிற கட்சிகள் தற்பொழுது விலகி உள்ள நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகளை ஒன்றிணைத்து, அதுபோல திமுகவோடு கூட்டணியில் சேரும் காட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்ற அஜெண்டா அதிமுகவிற்கு கொடுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்றை அவர் கூறியுள்ளார்.
வேலூரில் ஒரே தெரிவில் 6 மதுபான கடைகள்; அரசுக்கு எதிராக டிடிவி தினகரன் காட்டம்