பெட்ரோல், டீசல் விலை இத்துடன் முடியாது என்றும் அதன் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சேர்மன் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா கூறி உள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை இத்துடன் முடியாது என்றும் அதன் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சேர்மன் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா கூறி உள்ளார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 17வது முறையாக விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
கிட்டத்தட்ட தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை கடந்துவிட்டது. டீசல் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கிறது. இந்த விலையேற்றம் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் பெட்ரோல், டீசல் விலை இத்துடன் முடியாது என்றும் அதன் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சேர்மன் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா கூறி உள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவர் தமது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு: சர்வதேச சந்தையில் தங்கம், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. டாலர் விலையில் கச்சா எண்ணெய் விலை சீராக இல்லை. விலை நிலவரம் மாறி, மாறி வருகிறது.
அதன் எதிரொலியாக தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இன்னும் வரக்கூடிய நாட்களில் பெட்ரோல், டீசல் மேலும் உயரும். அதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவில் மக்கள் இப்போது சகஜ வாழ்க்கைக்கு திரும்பி உள்ளதால் பெட்ரோல், டீசல் தேவை அதிகரித்து காணப்படுகிறது. அதிகம் பயன்படுத்துவதாலும் விலை உயருகிறது என்று கூறினார்.