அடடே.! சூப்பர்..! இந்தியாவில் தமிழகத்தில் தான் முதல் முறை..! ரோபோட்டிக் அறுவை சிகிச்சை கருவி அறிமுகம்..

Published : Feb 18, 2022, 07:16 PM ISTUpdated : Feb 18, 2022, 07:17 PM IST
அடடே.! சூப்பர்..! இந்தியாவில் தமிழகத்தில் தான் முதல் முறை..! ரோபோட்டிக் அறுவை சிகிச்சை கருவி அறிமுகம்..

சுருக்கம்

இந்தியாவிலே முதல் முறையாக மாநில அரசு மருத்துவமனையில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

தமிழ்நாட்டில் ஆறு தனியார் மருத்துவமனைகளிலும் மத்திய அரசு நடத்தும் மருத்துவமனைகளில் மட்டுமே இந்த வசதி தற்போது வரை இருந்து வந்தது. இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு மாநில அரசு மருத்துவமனையில் இந்த ரோபோடிக் கருவி பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதனை அடுத்த வாரம் முதல்வர் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறார்.

35 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த கருவி அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இது பயன்டுத்தப்படும் அறுவை அரங்கு ரூ.50 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.இந்த கருவி மனித கைகள் போன்று நான்கு கைகள் கொண்டுள்ளது. இதை கொண்டு அறுவை சிகிச்சைகளை மிக துல்லியமாகவும், நுட்பமான அறுவை சிகிச்சைகளை சரியாக செய்யவும் முடியும். 

மருத்துவர்கள் ஒரு திரை முன் அமர்ந்திருப்பார்கள். ரோபோவில் இருக்கும் கேமரா மூலம் நோயாளியின் உறுப்புகள் அந்த திரையில் மருத்துவருக்கு தெரியும். மருத்துவர் நேரடியாக அறுவை சிகிச்சை செய்வது போல தன் கைகளை அசைப்பார். அதே போல ரோபோ நோயாளிக்கு சம்பந்தப்பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை செய்யும்.

ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து புற்றுநோயியல், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர், நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை நிபுணர், இருதய அறுவை சிகிச்சை, கை சீரமைப்பு அறுவை சிகிச்சை ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் கேரளாவில் இதற்கான பிரத்யேக பயிற்சி பெற்று வந்துள்ளனர்.

இந்த கருவியை வேறு இடத்திலிருந்தும் மருத்துவர்கள் இயக்க முடியும். நீண்ட நேரம் அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்களுக்கான அயற்சி, கை நடுக்கம் உள்ளிட்ட மனித தவறுகளை இதன் மூலம் தவிர்க்க முடியும் என ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார் கூறுகிறார். இதனால் அறுவை சிகிச்சை நிபுணர்களின் தேவை குறையும் என்றும் தெரிவிக்கிறார்.

மூட்டுமற் றும் நரம்பு சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகள் தவிர தசை சார்ந்த மற்ற அறுவை சிகிச்சைகளை இந்த கருவி மூலம் செய்ய முடியும்.பெண்களுக்கான கர்ப்பப்பை சிகிச்சை, புற்றுநோய் கட்டிகள் அகற்றுவது, சிறுநீரக அறுவை சிகிச்சை உள்ளிட்டவை ரோபோ மூலம் துல்லியமாக செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!