"உன்னை கல்யாணம் செஞ்சுக்கிறேன்".. 10ம் வகுப்பு மாணவி.. ஏமாற்றி கர்பமாக்கிய இளைஞன் - கோவையில் பரபரப்பு!

By Ansgar R  |  First Published Nov 6, 2023, 9:06 AM IST

Coimbatore : கோவையில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரை அவருடைய உறவினர் பையன் ஒருவனே கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பம் ஆக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


22 வயது நிரம்பிய அந்த நபர் கோயம்பத்தூர் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவராவார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர், கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் அந்த நபர், தனது உறவினர் சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பல சமயங்களில் அவரை கற்பழித்துள்ளார். 

இறுதியில் அவர் கர்ப்பம் அடைந்தது தெரிய வந்ததும், சில மாத்திரைகளை கொடுத்து அவருக்கு கருக்கலைப்பு செய்ய முயற்சித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரணையில் வெளியான தகவலின் படி அந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி அடிக்கடி அந்த நபருடன் அலைபேசியில் பேசி வந்ததாகவும், ஆனால் அவருடைய தாய் அவரை கண்டித்து ஒழுங்காக படிக்க சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Tap to resize

Latest Videos

நான் சொல்றத கேக்கலனா பெயில் ஆகிடுவேன்! 60 பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளியின் முதல்வர்!

இந்த சூழ்நிலையில் தான் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி அந்த மாணவி, தனது வீட்டை விட்டு வெளியேறி அவரது தோழி வீட்டுக்கு சென்று விட்டு விரைவில் திரும்பி விடுவதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாத காரணத்தினால், பதறிப்போன அவருடைய தாய் உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த சூழலில் தான் கடந்த வெள்ளிக்கிழமை காலை போலீசார் அந்த சிறுமி இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர். அப்பொழுது அவர் அந்த இளைஞருடன் இருந்ததாகவும், உடனடியாக அவரை மீட்டு வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளார். விசாரணையில் சிறுமியுடன் இருந்த அந்த இளைஞருக்கும், அந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. 

"வேலையில் ஸ்ட்ரிக்ட்.. அவர் ஒரு இரும்பு பெண்மணி".. பெங்களூரு அரசு அதிகாரி கொடூர கொலை - சக ஊழியர் சொன்ன தகவல்!

மேலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை அந்த மாணவியை, அந்த இளைஞன் கற்பழித்ததும் தெரிய வந்துள்ளது. அந்த இளைஞனுக்கு ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகளும் மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த சிறுமி அளித்த வாக்குமூலத்தின் படி போலீசார் அந்த இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!