ஹை-டெக் திருட்டுக் கும்பல் !! ஏசி காரில் வந்து ஆடுகளை ஆட்டையைப் போட்ட ஆசாமிகள்!!

By Selvanayagam PFirst Published Sep 8, 2018, 8:37 PM IST
Highlights

கடலூர் அருகே ஏசி காரில் கிராமங்களுக்குள் நுழைந்து ஆடுகளை திருடிய கும்பலை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் புகுந்து திருட்டுக் கும்பல் ஒன்று ஆடுகளை திருடிச் செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது. பெரும்பாலும் ஆடுகள் திருடப்பட்டால் அடுத்த சில நிமிடங்களில்  திருடு போனது தெரிந்துவிடும்.

அதனால் சில நேரங்களில் ஆடுகளை திருடிக் சென்ற சில நிமிடங்களில் கிராம மக்கள் விரட்டிச் செல்லும்போது திருடன்கள் ஆடுகளை விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். இது போன்ற சம்பவங்கள் கிராமங்களில் நடக்கும்.

இந்நிலையில் கடலூர் கிராமப்பகுதிகிளில் இரவு நேரத்தில் ஆடுகள் காணாமல் போவதாகவும், ஒரு சில நிமிடங்களில், ஆடுகள் மாயமாகிப் போவதும் கிராம மக்களை ஆச்சரியப்டுத்தி வந்தன.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் வீராணம் பகுதிகளில் ஒரு கும்பல் ஏசி காரில் வந்து நள்ளிரவில் ஆடுகளை திருடிக் கொண்டிருந்தனர். அப்போது விழித்துக் கொண்ட கிராம மக்கள் அவர்களை துரத்தினர்.

ஆனால் அந்த கும்பல் ஆடுகளுடன் காரில் ஏறி தப்பினர்.  இது குறித்து அந்த கிராம மக்கள் அருகில் உள்ள கிராம மக்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். இதையடுத்து பக்கத்து கிராமத்தில் அந்த ஏசி காரை மடக்கிப் பிடித்த மக்கள் அவர்களுக்கு சரமாரியா அடியைக் கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

காரில் வந்து ஆடு திருடிய அந்த ஹைடெக் கும்பலை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

click me!