இன்று 9வது நாள்.. மோப்ப நாய்…. அதிரடி படை… ஆட்கொல்லி புலியை தேடும் பணி தீவிரம்

By manimegalai a  |  First Published Oct 3, 2021, 8:12 AM IST

கூடலூர் அருகே 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.


கூடலூர்: கூடலூர் அருகே 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

நீலகிரி மாவட்டம், கூடலூர் அச்சுறுத்தி வரும் புலி 4 பேரை கொன்றுள்ளது. மேலும் ஏராளமான கால்நடைகளும் புலிக்கு இரையாகி உள்ளன. தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலை அளித்து வரும் புலியால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

இதையடுத்து புலியை சுட்டுக் கொல்ல வனத்துறை உத்தரவிட்டுள்ளது. உடனடியாக தமிழக, கேரள வனத்துறையினர், தமிழக அதிரடி படை நக்சல் பிரிவினர் இணைந்து புலியை தேடி களம் இறங்கி உள்ளனர்.

9வது நாளாக இன்றும் புலி வேட்டை தொடங்கி இருக்கிறது. ட்ரோன் கேமரா பயன்படுத்தப்பட்ட புலியின் இருப்பிடத்தை கண்டறியும் பணியும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

மேலும் சிப்பிப்பாறை வகையை சேர்ந்த அதவை என்ற மோப்ப நாயும் புலியை தேடி களத்தில் இறங்கி உள்ளது. மசினகுடியில் உள்ள புலிக்கு T 23 என அடையாளம் வைக்கப்பட்டு உள்ளது. அந்த புலிக்கு மூக்கு, வலது கண்ணில் காயம் இருப்பதும் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

புலி தேடுதல் வேட்டையை தொடர்ந்து தெப்பக்காடு, மசினகுடி சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 40 கேமராக்களில் புலியின் நடமாட்டம் எங்கு எங்கு பதிவாகி உள்ளது என்று கண்டறிப்பட்டு அதன் அடிப்படையில் புலி வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

click me!