மாணவர்களே மகிழ்ச்சி செய்தி !! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு..

Published : Feb 15, 2022, 07:03 AM IST
மாணவர்களே மகிழ்ச்சி செய்தி !! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு..

சுருக்கம்

அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (16-ஆம் தேதி)  விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

மாசி மாதம் பௌர்ணமியும், மகம் திதியும் சேர்ந்து வரக்கூடிய அற்புத நாள் மாசி மகம் என கொண்டாடப்படுகிறது. மாசி மகம் என்பது மாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திர நாளில் இந்துக்களால் விரதமிருந்து மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

பெளர்ணமியுடன் கூடிய மாசி மகம் திதி அதாவது நாளை 16.02.2022 மாலை 4.13 மணிக்கு வருகின்றது. மாசி மக நட்சத்திரத்தன்று புனித நிர் நிலைகள், நதிகள், ஆறுகளில் நீராடி கோயிலுக்கு சென்று வழிபட்டு வர நாம் பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுபடலாம். இந்நிலையில் இவ்விழாவையொட்டி புதுச்சேரியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 16-ஆம் தேதி விடுமுறை அளித்து கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி அறிவித்து உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!