நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கண்காணிக்க மூன்று குழுக்கள் அமைப்பு... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

Published : Feb 10, 2022, 03:51 PM IST
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கண்காணிக்க மூன்று குழுக்கள் அமைப்பு... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

சுருக்கம்

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவை திருத்தி அமைத்து, மூன்று குழுக்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவை திருத்தி அமைத்து, மூன்று குழுக்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை குழு அமைத்து மீட்க, கண்காணிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர், நீர்வளத்துறை செயலாளர் நெடுஞ்சாலைத்துறை செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர், டிஜிபி, சென்னை மாநகராட்சி ஆணையர், ஊரக வளர்ச்சி துறை இயக்குனர், நெடுஞ்சாலை துறை தலைவர், நில அளவு இயக்குனர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மண்டல அளவிலான கண்காணிப்பு குழுவில், தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

அதேப்போல்,மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராக கொண்ட குழுவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர பகுதிகளில் மாநகர காவல் ஆணையர்கள்,மாநகராட்சி ஆணையர்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு நீர்நிலைகளை கண்காணிப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, நீதிமன்ற உத்தரவுகளை கண்காணித்து மதிப்பாய்வு செய்வதோடு,மாதம் ஒரு முறை கூடி ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு பரிந்துரைகளை அரசிற்கு வழங்கும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!