உண்மையை உரக்க சொன்னதால் சஸ்பெண்ட்...! மக்களுக்காக மக்களிடமே நீதிகேட்ட டிரைவரின் பரபரப்பு வீடியோ!

Oct 8, 2018, 1:34 PM IST

நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த வீடியோவை பார்த்து, என்னை காலவரையற்ற சஸ்பெண்ட் செய்துள்ளார்கள் என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஒட்டுநர் விஜயகுமார் வேதனை தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் தினமும் 20,000-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

இதில் சுமார் 70 சதவீதம் பஸ்கள் காலாவதியானவை. அரசு பேருந்து என்றாலே ஓட்டை, உடைசலுடன் காணப்படும் என்றும் மழைக்காலங்களில் பேருந்துக்குள் மழைநீர் ஒழுகுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் பல்வேறு அரசு பேருந்துகளில், இருக்கைகளில் அமர முடியாமல் பயணிகள் நின்றபடியே பயணிக்கின்றனர். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இயக்கப்படும அரசு பேருந்துகள், தரமற்ற முறையில் இருப்பதாக ஓட்டுநர் விஜயகுமார் என்பவர் வேதனை தெரிவித்த வீடியோ வெளியாகி இருந்தது. 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், ஓட்டுநர் விஜயகுமார், அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஓட்டுநர் விஜயகுமார், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பேருந்து ஓட்டும்போது, நான் நண்பர்களுடன் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தேன். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து என்னை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். 

பேசக் கூடாது என்ற எந்த சட்டமும் இல்லையே? நண்பர்கள் செய்த செயலுக்கு என்னை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். நண்பர்களுடன் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்ததை என்னை காலவரையற்ற சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். இது குறித்து போக்குவரத்து நிர்வாகமும், அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓட்டுநர் விஜயகுமார் கூறினார்.