தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலில் தனக்கு சீட் வழங்கப்படாத அதிருப்தியால் கட்சி நிர்வாகிகள் கட்சி மாறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
பாஜக பட்டியல் அணி மாநில தலைவராக இருந்த தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலில் தனக்கு சீட் வழங்கப்படாத அதிருப்தியால் கட்சி நிர்வாகிகள் கட்சி மாறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சிதம்பரம் தொகுதி தனக்கு ஒதுக்கப்படாத காரணத்தால் அதிருப்தியில் இருந்து வந்த தடா பெரியசாமி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
undefined
இதையும் படிங்க: Thada Periyasamy Join AIADMK: அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த தடா பெரியசாமி! தட்டித்தூக்கிய எடப்பாடி பழனிசாமி.!
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் மலேசியா எஸ்.பாண்டியன். இவர் தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில துணைத் தலைவராக உள்ளார். மேலும், கடந்த 2016-21-ல் முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக வும் இருந்தார். இவர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.