நீலகிரி மாவட்டத்தில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுத் தள்ள வனத்துறை அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுத் தள்ள வனத்துறை அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் புலி ஒன்று நடமாடி வருகிறது. கடந்த 7 நாளில் கிட்டத்தட்ட 4 பேரை கொன்றுள்ளது. மேலும் 12 கால்நடைகளும் இறந்துள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டில் 4 பேரும், 30 கால்நடைகளும் இந்த புலியால் உயிரிழந்துள்ளன.
13 வயதான இந்த புலியை உயிரோடு பிடிக்க வேண்டும் என்பதற்கான வனத்துறை அதிகாரிகள் கடும் முயற்சி எடுத்து வந்தனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள், யானைகளுடன் களம் இறங்கியும் புலி சிக்கவில்லை. மயக்க ஊசி போட்டு பிடிக்கும் வனத்துறையின் முயற்சியும் தோல்வியை சந்தித்தது.
இந் நிலையில், 4 பேரை கொன்று அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் அதிரடியா உத்தரவிட்டு உள்ளார். தற்போது ஆட்கொல்லி புலியானது தேவன் எஸ்டேட்டில் இருந்து மசினக்குடிக்கு இடம்பெயர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.
மக்கள் மத்தியில் தொடர்ந்து பீதியை ஏற்படுத்தி வரும் இந்த புலியை விரைவில் வனத்துறையினர் சுட்டுக் கொல்வார்கள் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். வனத்துறை உத்தரவை அடுத்து அதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.