வீடு அடமானம்.. கடன் வாங்கியவர் இறப்பு.. பணத்தை கேட்ட ஊழியர்கள்- நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி!

By Raghupati R  |  First Published Mar 9, 2024, 12:53 PM IST

எக்விடாஸ் தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டை அடமானமாக வைத்து கடன் வாங்குபவர் இறந்த சூழலில், நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தை கட்ட வேண்டும் என்று மிரட்டி உள்ளனர்.


காரக்கோட்டை பகுதியை சேர்ந்த ஜோதி என்பவரது கணவர் நல்லதம்பி மன்னார்குடியில் உள்ள எக்விடாஸ் தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டை அடமானமாக வைத்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றார். ஒவ்வொரு மாதமும் 7050 ரூபாய் மாத தவணையாக கட்டி வந்த நிலையில் இதய நோயாளியான நல்லதம்பி மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மாத தவணைத் தொகை 7050 ரூபாயை  மூன்று மாத காலத்திற்கு மொத்தம் 21, 105 ரூபாய் நிதி நிறுவன  பணியாளர்கள் வசூலித்து உள்ளனர். பின்னர் இன்சூரன்ஸ் கிளைம் ஆகிவிட்டதால் கடன் தொகையை செலுத்த தேவையில்லை என்று தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கூறியுள்ளனர். வீட்டின் அடமான பத்திரம் மற்றும் தடையில்லா சான்றுகளை தர மறுத்து கூடுதலாக 105162 ரூபாய் செலுத்த வேண்டுமென நிதி நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

Latest Videos

இது தொடர்பாக ஜோதி திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனியார் நிதி நிறுவனம் உடனடியாக மனுதாரரின் வீட்டு பத்திரம் மற்றும் தடையில்லா சான்றுகளை வழங்க வேண்டும். சட்ட விரோதமான முறையில் வசூல் செய்த 21 ஆயிரத்து 150 ரூபாய் பாதிக்கபட்ட நபரின் உளைச்சலுக்காக 5 லட்சம் ரூபாயும், வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாய் என 5,31,150 ரூபாயை 9%  வட்டியுடன் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

click me!